\
திருமலை திருப்பதியில் திடீர் தீ விபத்து

திருமலை திருப்பதியில் திடீர் தீ விபத்து

திருமலை திருப்பதியில் திடீர் தீ விபத்து
Published on

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு தயாரிக்கும் கூடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால், லட்டு தயாரிக்கும் பணிகள் பாதிக்கப்பட்டன. நல்வாய்ப்பாக இந்தத் தீ விபத்தில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.

தகவல் அறிந்து மூன்று தீயணைப்பு வாகனங்களில் சென்ற தீயணைப்பு வீரர்கள் சில மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்து காரணமாக லட்டு தயாரிக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. லட்டு தயாரிக்கும் கூடத்தில் இருந்த புகைப்போக்கியில் அதிகப்படியான எண்ணெய் படலம் படர்ந்திருந்ததே தீ விபத்து நிகழ காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com