டெல்லியில் ஜவுளிக்கடையில் பயங்கர தீ விபத்து: தீயை அணைக்கும் பணியில் 30 தீயணைப்பு வாகனங்கள்

டெல்லியில் ஜவுளிக்கடையில் பயங்கர தீ விபத்து: தீயை அணைக்கும் பணியில் 30 தீயணைப்பு வாகனங்கள்

டெல்லியில் ஜவுளிக்கடையில் பயங்கர தீ விபத்து: தீயை அணைக்கும் பணியில் 30 தீயணைப்பு வாகனங்கள்
Published on

டெல்லி லாஜ்பத் நகரில் உள்ள ஜவுளிக்கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால், அப்பகுதியே புகை மண்டலமாக காட்சியளித்தது.

கொரோனா தொற்று குறைந்ததை அடுத்து டெல்லியில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இயல்பு வாழ்க்கை மெல்ல திரும்பி வருகிறது. இந்நிலையில், லாஜ்பத் நகரில் உள்ள ஜவுளிக் கடையில் இன்று காலை திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. துணிகளில் பற்றிய தீ கொளுந்து விட்டு எரிந்ததில், அருகில் இருந்த பிற கடைகளுக்கும் மளமளவென பரவியது.

தகவல் அறிந்து 30 வாகனங்களில் வந்த தீயணைப்புப் படையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வர முயன்றனர். எனினும், கொளுந்துவிட்டு எரிந்ததால் அதனை கட்டுப்படுத்த தீயணைப்புத் துறையினர் கடுமையாக முயற்சித்தனர். நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com