டெல்லியில், பிரதமர் அலுவலகத்தில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. அங்குள்ள இரண்டாவது தளத்தில், அறை எண் 242ல் அதிகாலை சுமார் 3 முப்பது மணியளவில் தீப்பற்றிக் கொண்டது. தகவலறிந்து 10 வாகனங்களில் வந்த தீயணைப்புப் படையினரும், மீட்புப் படையினரும் தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். அலுவலகத்தில் இருந்த ஆவணங்கள் ஏதேனும் சேதமடைந்ததா? என்பது பற்றி தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. விபத்தால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். தீ விபத்துக்கான காரணம் பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது.