டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையின் ஐசியூ வார்டில் தீ விபத்து!

டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையின் ஐசியூ வார்டில் தீ விபத்து!

டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையின் ஐசியூ வார்டில் தீ விபத்து!
Published on

டெல்லியில் உள்ள  சப்தர்ஜங் மருத்துவமனையின் ஐசியூ வார்டில் இன்று அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டது.

தீ விபத்தை அடுத்து ஐசியூ வார்டில் இருந்த 50 நோயாளிகள் மற்ற வார்டுகளுக்கு மாற்றப்பட்டனர். தற்போது, 50 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. மின்கசிவு காரணமாக தீ விபத்து நடந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

தொடர்ந்து தீ விபத்துக்கான முழுமையான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையான சப்தர்ஜங் மருத்துவமனை, நாட்டில் அதிக படுக்கைகளை கொண்ட மருத்துவமனைகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.  

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com