\
தாராவியில் தமிழரின் துணி நிறுவனத்தில் தீ விபத்து

தாராவியில் தமிழரின் துணி நிறுவனத்தில் தீ விபத்து

தாராவியில் தமிழரின் துணி நிறுவனத்தில் தீ விபத்து
Published on

தாராவியில், தமிழருக்கு சொந்தமான ஆயத்த ஆடை நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டது. 

மும்பை தாராவி பகுதியில் உள்ள 90 அடி சாலையில், குணசேகர் என்பவர் ஆயத்த ஆடை நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். தமிழரான இவரது இந்த நிறுவனத்தில் நேற்று காலை பயங்கரமாக தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் எட்டு வாகங்களில் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்க போராடினர். சுமார் 3 மணி நேரத்துக்கு பிறகு தீ முழுமையாக அணைக்கப்பட்டது. இந்த விபத்தில் ஏராளமான துணிகள் எரிந்து நாசமானது. மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. தாராவி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com