ஐதராபாத் அருகே நிஜாம்பேட்டையிலுள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று நள்ளிரவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீயை அணைக்க தீயணைப்புப்படையினர் தீவிரம் காட்டி வந்த நிலையில், அம்மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்த மூச்சுத்திணறல் காரணமாக 25 முதல் 30 நோயாளிகள் வேறு மருத்துவமனைக்கு வேகமாக மாற்றப்பட்டுள்ளனர். மற்றபடி நோயாளிகள் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லையென கூறப்படுகிறது. தற்போதைக்கு சாதனங்களுக்கு மட்டும் சேதம் ஏற்ப்பட்டுள்ளன.
கள தகவல்களின்படி, மருத்துவமனையில் முதல் தளத்தில் அதிகமாக புகை வந்ததாகவும் அதனால் அங்கு சிகிச்சை பெற்றோர் தீவிர மூச்சுத்திணறலுக்கு உள்ளானதாகவும் கூறப்படுகிறது. சுமார் 4 தீயணைப்பு வாகனங்கள் பணியில் ஈடுபட்டிருந்திருக்கிறது. முதற்கட்ட தகவலாக, மருத்துவமனையில் ஏற்பட்ட ஷார்ட் சர்க்யூட்தான் தீ விபத்துக்கு காரணமாக இருக்கக்கூடுமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.
சமீபத்திய செய்தி: கடன் தொல்லை: திருச்சி நீதிமன்ற வாயிலில் மேற்கொண்ட விபரீத முடிவு