மும்பை சினிமா ஸ்டூடியோவில் தீவிபத்து ஏற்பட்டது. இதில் உயிரிழப்பு ஏதுமில்லை என்று தெரிகிறது.
மும்பையில் கடந்த வாரம் கமலா மில்ஸ் வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர்
படுகாயமடைந்தனர். பின்னர் கடந்த சில நாட்களுக்கு முன் மரோல் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 4
பேர் பலியாயினர். இந்த ஈரம் காய்வதற்குள் மீண்டும் ஒரு தீ விபத்து சம்பவம் நேற்று நடந்துள்ளது. மும்பை கஞ்சூர்மார்க் பகுதியில் இருக்கும் சினிவிஸ்டா ஸ்டூடியோவில் இந்த தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. 7 தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்து தீயை போராடி அணைத்தன. இதன் சேத விவரங்கள் குறித்து உடனடியாக ஏதும் தெரியவில்லை.
இந்த ஸ்டூடியோவில் படப்பிடிப்புக்காக 30 தளங்கள் இருக்கிறது. தீ விபத்து நடந்த போது இரண்டு தளங்களில் டி.வி. சீரியலுக்கான
படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தது. விபத்துக்கான் காரணம் உடனடியாக தெரியவில்லை.