இந்தியா
துணிக்கடையில் பயங்கர தீ : கட்டிடம் இடிந்து விழுந்தது
துணிக்கடையில் பயங்கர தீ : கட்டிடம் இடிந்து விழுந்தது
ஆந்திரா மாநிலம் சித்தூரிலுள்ள பிரபல துணிக்கடையில் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. அதிகாலையில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் ரூ. 5 கோடி மதிப்பிலான ஆடைகள் எரிந்து நாசமாகின. 50 ஆண்டுகள் பழமையான அந்த துணிக்கடையும் தீயில் எரிந்து சேதமடைந்தது.
துணிக்கடையின் முதலாவது மாடியில் இன்று அதிகாலை 2 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மூடியிருந்த கடையை திறப்பதற்கு தாமதம் ஏற்பட்டதால், அதற்குள் தீ கட்டடம் முழுவதும் பரவியது. பொக்லைன் இயந்திரம் மூலம் கடையின் துவர் இடிக்கப்பட்டு, பின் தீ கட்டுப்படுத்தப்பட்டது. அதனையடுத்து கட்டடம் முழுமையாக இடிந்து விழுந்தது.