\
டெல்லி வருமானவரித்துறை அலுவலகத்தில் தீ விபத்து
டெல்லி வருமானவரித்துறை அலுவலகத்தில் தீ விபத்துபுதிய தலைமுறை

டெல்லி | வருமான வரித்துறை அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்து... ஒருவர் உயிரிழப்பு!

டெல்லியில் வருமானவரித்துறை அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
Published on: 

டெல்லியில் பழைய காவல் தலைமை அலுவலகத்துக்கு எதிரே வருமானவரித்துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அங்குள்ள மூன்றாவது தளத்தில் நேற்று பிற்பகல் 3 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள், ஜன்னல் வழியாக வெளியேற முயன்றனர்.

தகவலறிந்து 21 வாகனங்களில் விரைந்த தீயணைப்புத்துறை வீரர்கள் 2 மணி நேரத்துக்கு பின் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். 7 பேர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், ஒருவர் மயக்க நிலையில் மீட்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் அலுவலக கண்காணிப்பாளர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

டெல்லி வருமானவரித்துறை அலுவலகத்தில் தீ விபத்து
பதஞ்சலி விளம்பரம் வழக்கு|பாபா ராம்தேவிடம் மீண்டும் கேள்வி.. தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு

இந்நிலையில், தீ விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்த விபத்தில் எந்த ஆவணங்களும் சேதம் அடையவில்லை என வருமானவரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com