மகாராஷ்டிர மாநிலம் துலேவில் உள்ள ரசாயன ஆலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
ரசாயன தொழிற்சாலையில் கிட்டத்தட்ட 100 தொழிலாளர்கள் உள்ளே இருந்த நிலையில் அவர்களில் 8 பேர் உயிரிழந்திருக்கலாம் எனத் தகவல் வெளியாகி உள்ளன. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். தொழிற்சாலையில் உள்ள சிலிண்டர்கள் வெடித்து இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன.