\
ஆந்திரா: ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

ஆந்திரா: ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

ஆந்திரா: ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து
Published on

ஆந்திராவில் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஆறு பேர் உயிரிழந்தனர். 13 பேர் படுகாயமடைந்தனர்.

அக்கிரெட்டிகூடம் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் ரசாயனக் கசிவு காரணமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து சென்ற தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர். விபத்தில் சிக்கி ஆறு பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 13 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு, தலா 25 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.

படுகாயமடைந்தவர்களுக்கு ஐந்து லட்ச ரூபாயும், லேசான காயமடைந்தவர்களுக்கு இரண்டு லட்ச ரூபாயும் நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த நபர்களின் குடும்பத்தினருக்கு ஆந்திரா ஆளுநர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com