\
மல்யுத்த வீரர் சுஷில் குமார் மீது வழக்குப் பதிவு

மல்யுத்த வீரர் சுஷில் குமார் மீது வழக்குப் பதிவு

மல்யுத்த வீரர் சுஷில் குமார் மீது வழக்குப் பதிவு
Published on

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள ‌மல்யுத்த வீரர் சுஷில் குமார் மீது டெல்லி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் ஏப்ரல் மாதம் நடக்கிறது. இதில் கலந்துகொள்ளும் தகுதியான இந்திய வீரர்களை அடையாளம் காண்பதற்கான தேர்வு டெல்லியில் நேற்று நடந்தது. ஒலிம்பிக்கில் 2 பதக்கம் வென்ற சுஷில்குமார் தகுதி சுற்றின் அரை இறுதியில் பர்வீன் ராணாவுடன் மோதினார். விறுவிறுப்பான ஆட்டத்தில் பிரவின் ராணா, சுஷில்குமாரின் கையை கடிக்க முயற்சித்தார். இதை பார்த்த சுஷில்குமாரின் ஆதரவாளர்கள் கோஷமிட்டனர். அரை இறுதியில் சுஷில்குமார் வெற்றி பெற்றார் .

பிறகு அரங்கின் வெளியே சுஷில் குமாரின் ரசிகர்களுக்கும், பிரவின் ராணாவின் ரசிகர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. சுஷில் குமாரின் ஆதரவாளர்கள் பிரவிண் ராணாவையும் தாக்கியதாக புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து சுஷில் குமார் மற்றும் அவரின் ஆதரவு ரசிகர்கள் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com