\
உயிரிழந்தவர் மீது போர்த்தப்பட்ட மூவர்ணக்கொடி: விவசாயி மீது உ.பி போலீசார் வழக்குப் பதிவு

உயிரிழந்தவர் மீது போர்த்தப்பட்ட மூவர்ணக்கொடி: விவசாயி மீது உ.பி போலீசார் வழக்குப் பதிவு

உயிரிழந்தவர் மீது போர்த்தப்பட்ட மூவர்ணக்கொடி: விவசாயி மீது உ.பி போலீசார் வழக்குப் பதிவு
Published on

டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தின்போது சாலை விபத்தில் உயிரிழந்த இருவரின் உடலின் மீது தேசியக் கொடி போர்த்தப்பட்டதற்காக விவசாயி மீது உத்தரபிரதேச போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் பலிஜிந்த்ரா. குடியரசு தினத்தன்று நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தின்போது காசிபூர் அருகே நடைபெற்ற சாலை விபத்தில் பலிஜிந்த்ராவின் அம்மாவும், சகோதரரும் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்கள் உடலின் மீது பலிஜிந்த்ரா குடும்பத்தினர் மூவர்ணக்கொடியை போர்த்தினர். இந்தப் புகைப்படங்களும் விடீயோவும் சமூக வலைத்தளத்தில் வைரலானது. இது காவல்துறையினரின் கவனத்துக்கும் சென்றது.

இதனையடுத்து தேசியக் கொடியை அவமதித்ததன் குற்றத்துக்காக விவசாயி பலிஜிந்தர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து போலீஸார் கூறும்போது "உயிரிழந்தவர்கள் ஒன்றும் தியாகிகள் அல்ல தேசியக் கொடி போர்த்தப்படுவதற்கு. அதனால் சட்டப்படி நடவடிக்கை எடுத்து இருக்கிறோம்" என தெரிவித்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com