குரோர்பதி நிகழ்ச்சியில் மனுஸ்மிருதி பற்றிய கேள்வி: அமிதாப் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு

குரோர்பதி நிகழ்ச்சியில் மனுஸ்மிருதி பற்றிய கேள்வி: அமிதாப் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு

குரோர்பதி நிகழ்ச்சியில் மனுஸ்மிருதி பற்றிய கேள்வி: அமிதாப் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு
Published on

மனுஸ்மிருதி பற்றிய கேள்வியை குரோர்பதி-12 நிகழ்ச்சியில் கேட்ட காரணத்தால், நிகழ்ச்சியின் தயாரிப்பாளர்கள் மற்றும் அமிதாப் பச்சனுக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் தாக்கல் செய்யப்பட்டுள்ளது

குரோர்பதி-12 சீசன் நிகழ்ச்சியின் சமீபத்திய கரம்வீரில் இந்து உணர்வுகளை புண்படுத்தியதற்காக, நிகழ்ச்சியின் தயாரிப்பாளர்கள் மற்றும்  அமிதாப் பச்சன் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டதால், கவுன் பனேகா குரோபதி சீசன் 12 நிகழ்ச்சி  சர்ச்சையில் சிக்கியுள்ளது.

சமூக ஆர்வலர் பெஸ்வாடா வில்சன் மற்றும் நடிகர் அன்னப் சோனி ஆகியோர் சமீபத்தில் கேபிசி-12 நிகழ்ச்சியில் விருந்தினர்களாக கலந்துகொண்டார்கள். இந்த விளையாட்டின் போது, அமிதாப் பச்சன் ரூ .6,40,000 க்கு ஒரு கேள்வியைக் கேட்டார், இது  மனுஸ்மிருதியுடன் தொடர்புடையது. இந்த கேள்வி, "டிசம்பர் 25, 1927 அன்று, டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரும் அவரது ஆதரவாளர்களும்  எந்த நூலின் நகல்களை எரித்தனர்?" அ) விஷ்ணு புராணம், பி) பகவத் கீதை, சி) ரிக்வேதம் டி) மனுஸ்மிருதி.” என கேட்கப்பட்டது

இந்த கேள்விக்கு சரியான பதில் ஈ) மனுஸ்மிருதி. இந்த சம்பவம் குறித்து விளக்கும் போது, அமிதாப் பச்சன், " 1927 ஆம் ஆண்டில், டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர், சாதி பாகுபாடு மற்றும் தீண்டாமையை கருத்தியல் ரீதியாக நியாயப்படுத்துவதற்காக பண்டைய இந்து நூலான மனுஸ்மிருதியைக் கண்டித்தார், மேலும் அவர் அதன் நகல்களையும் எரித்தார்" என்று  கூறினார்.

அதன்பின்னர் இந்த கேள்வி, இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்துவதாக சொல்லி நிகழ்ச்சியை நெட்டிசன்கள் பலரும் கடுமையாக விமர்சிக்க தொடங்கியுள்ளனர், இதன்காரணமாக இப்போது இவர்கள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஆதரவான கருத்துகளும், எதிர்கருத்துகளும் பதிவாகிவருகின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com