விவசாயிகளின் நிலை இதற்கு முன் இப்படி இருந்ததில்லை என்று சொல்லும் அளவிற்கு, மத்திய பிரதேசத்தில் நிகழ்வு ஒன்று அரங்கேறியிருக்கிறது.
மத்தியபிரதேச மாநிலம் ஷெகோர் பஸந்த்பூர் என்ற பகுதியில், கடுமையான பொருளாதார நெருக்கடியால் சிக்கித் தவிக்கும் ஒரு விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர், மாடு வாங்க காசு இல்லாததால், தனது இரு சகோதரிகளின் உதவியுடன் ஏர்பூட்டி நிலத்தை உழுது வருகிறார். நாட்டின் முதுகெலும்பு என்று வர்ணிக்கப்படும் விவசாயிகளை நாம் இப்படித்தான் கவுரவித்துக் கொண்டிருக்கிறோம்.