“தனியாக மீன்வளத்துறை உருவாக்கப்படும்” - பட்ஜெட்டில் அறிவிப்பு
மீனவர்களின் நலனுக்காக தனியாக மீன்வளத்துறை உருவாக்கப்படும் என மத்திய இடைக்கால பட்ஜெட்டில் நிதியமைச்சர் பியூஸ் கோயல் அறிவித்துள்ளார்.
கால்நடை, மீன் வளர்ப்பு துறையில் கடனை உரிய காலத்தில் செலுத்துவோருக்கு 3 சதவீதம் வட்டி சலுகை அறிவிக்கப்படும் எனவும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீன் வர்த்தகம் கடந்தாண்டில் மட்டும் 7 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், இந்தியாவின் பொருளாதாரத்தில் 6.3 சதவீத பங்களிப்பை மீனவளத்துறை அளித்த வருவதாகவும் மத்திய இடைக்கால பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீன்வளத்துறையை சார்ந்துள்ள 1.45 கோடி மக்களின் வாழ்வை மேம்படுத்தும் நோக்கி இந்த அறிவிப்புகள் இருக்கும் என்று பியூஸ் கோயல் தெரிவித்தார்.
இதனிடையே, மீன்வளத்துறை அமைக்கப்படும் என்று மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளதாக, அதற்கான நிதி எவ்வளவு என்பதை தெரிவிக்கவில்லை என்று முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.