நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்Twitter
இந்தியா
நிதியமைச்சர் தலைமையில் தொடங்கிய மத்திய பட்ஜெட் ஆலோசனை கூட்டம்!
வரும் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் குறித்த ஆலோசனை கூட்டம் இன்று தொடங்கியுள்ளது.
2025-26ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் வரும் பிப்ரவரி மாதம் ஒன்றாம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் மத்திய பட்ஜெட் குறித்த ஆலோசனை கூட்டம் தொடங்கியுள்ளது. இதில், பொருளாதார நிபுணர்கள், தொழில்துறையினர், விவசாய அமைப்பினர் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.
நிர்மலா சீதாராமன்முகநூல்
அவர்களிடம் வரும் நிதியாண்டுக்கான பட்ஜெட் குறித்த யோசனைகளையும், கோரிக்கைகளையும் கேட்டறிய மத்திய நிதியமைச்சர் திட்டமிட்டுள்ளார். பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன் பல்வேறு துறையைச் சேர்ந்தவர்களுடன் 9 முறை ஆலோசனை நடத்த நிர்மலா சீதாராமன் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தலைப்புச் செய்திகள் | அதிகரிக்கும் விஷ சாராய மரணங்கள் முதல் இன்றைய மத்திய பட்ஜெட் ஆலோசனை கூட்டம் வரை