ரூ.80,250 கோடியில் சாலைகள் - நிர்மலா சீதாராமன்

ரூ.80,250 கோடியில் சாலைகள் - நிர்மலா சீதாராமன்

ரூ.80,250 கோடியில் சாலைகள் - நிர்மலா சீதாராமன்
Published on

80 ஆயிரத்து 250 கோடி ரூபாய் செலவில் நாடு முழுவதும் 25 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவிற்கு சாலைகள் அமைக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 

2019 - 20ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதில் நெடுஞ்சாலை துறைக்கு சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதில், 80 ஆயிரத்து 250 கோடி ரூபாய் செலவில் நாடு முழுவதும் 25 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவிற்கு சாலைகள் அமைக்கப்படும் என்றும் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் 30 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவிற்கு பசுமை சாலைகள் அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் பிரதமரின் கிராமப்புற சாலைகள் திட்டத்தின்கீழ் பசுமை சாலைகள் அமைக்கப்படும் எனவும் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com