'ஒரு நாடு ஒரே மின்கட்டமைப்பு' என்றால் என்ன ? 

'ஒரு நாடு ஒரே மின்கட்டமைப்பு' என்றால் என்ன ? 
'ஒரு நாடு ஒரே மின்கட்டமைப்பு' என்றால் என்ன ? 

மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள ஒரு நாடு ஒரே மின்கட்டமைப்பு என்றால் என்ன என்பதை பார்க்கலாம்.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் நீர், காற்று, அணுசக்தி உள்ளிட்டவை மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் மின்சாரத்தில் தன்னிறைவு பெற்ற மாநிலங்களும் உள்ளன. மின் தட்டுப்பாட்டை சந்திக்கும் மாநிலங்களும் உள்ளன. மின் தட்டுப்பாட்டை சந்திக்கும் மாநிலங்கள் தங்களுக்கு தேவையான மின்சாரத்தை விலைக்கு வாங்குகின்றன. 

இந்தியாவை பொறுத்தவரை வடக்கு, கிழக்கு, மேற்கு, தெற்கு என பிரிந்திருந்த மின் கட்டமைப்புகள் படிப்படியாக ஒருங்கிணைக்கப்பட்டு அதன் மூலம் உருவானது தான் தேசிய மின் கட்டமைப்பு நிறுவனம். 2013ஆம் ஆண்டிலேயே மின் கட்டமைப்புகள் ஒரே குடையின் கீழ் இணைக்கப்பட்டிருந்தாலும் மின் விநியோகம் உள்ளிட்டவை ஒரே நடைமுறையில் கொண்டு வரப்படவில்லை. மின் தேவைக்கு ஏற்ப கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டு ஒவ்வொரு மாநிலத்திற்கும் விற்கப்படுகின்றன. இவற்றை மாற்றி நாடு முழுவதும் ஒரே விலைக்கு மின்சாரத்தை கொடுக்கும் வழியை இந்த திட்டம் ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. 

இதன் மூலம் மின்சாரத்தின் விலை குறையலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒற்றை மின்கட்டமைப்புக்குள் ஒருங்கிணைக்கப்படும் போது ஒரு மாநிலத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தை மற்ற மாநிலங்களுக்கு கொண்டு செல்வது இன்னும் எளிதாகும் என கூறப்படுகிறது. மாநிலங்களுக்கு இடையிலான மின் பகிர்வு எளிமையாக்கப்பட்டு, அதன் நிர்வாகம் ஒற்றை குடையின் கீழ் வந்துவிடும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com