இந்தியா
“பாதுகாப்புத்துறை உபகரணப் பொருட்கள் தயாரிப்பில் 74 % அந்நிய முதலீடு” - நிர்மலா சீதாராமன்
“பாதுகாப்புத்துறை உபகரணப் பொருட்கள் தயாரிப்பில் 74 % அந்நிய முதலீடு” - நிர்மலா சீதாராமன்
பாதுகாப்புத் துறைக்கான அந்நிய முதலீட்டை 74 சதவீதம் வரை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
இந்தியாவில் கொரோனா பொது முடக்கத்தில் முடங்கிய பொருளாதாரத்தை மீட்கப் பிரதமர் மோடி ரூ.20 லட்சம் கோடிக்கு நிவாரண திட்டங்கள் அறிவிக்கப்படும் என்றார். அதற்கான திட்டங்களை நான்காவது நாளாக இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்து வருகிறார். இன்றைய செய்தியாளர் சந்திப்பில் அவர் தொழில்துறை வளர்ச்சிக்குக் கொள்கை சீர்திருத்தம் தேவை என்றார்.
மேலும் அவர், ராணுவத் தளவாட உற்பத்தியில் தன்னிறைவை எட்டும் வகையில் ‘மேக் இன் இந்தியா’ திட்டம் பயன்படுத்தப்படும் என அறிவித்தர். மேலும் பாதுகாப்பு உபகரணங்களின் இறக்குமதியைக் குறைத்து உள்நாட்டில் கொள்முதல் செய்ய புதிய விதிமுறை அமல்படுத்தப்படும் எனப்படும் என்றார்.
தொடர்ந்து பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பாதுகாப்புத் துறைக்கான பொருட்களைத் தயாரிப்பதில் இதுவரை 49% அன்னிய முதலீடு அனுமதிக்கப்பட்டிருந்தது. தற்போது 74 சதவீதம் அந்நிய முதலீட்டை அனுமதிக்க அரசு முடிவு செய்துள்ளது என்றார். அதனையடுத்து சீர்திருத்தங்கள் மூலமாக விமானங்களை இயக்குவதற்கான செலவை ரூ. 1000 கோடி வரை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.