'நடப்பாண்டில் 5ஜி தொழில்நுட்பத்திற்கு ஏலம் நடைபெறும்' - நிர்மலா சீதாராமன்

'நடப்பாண்டில் 5ஜி தொழில்நுட்பத்திற்கு ஏலம் நடைபெறும்' - நிர்மலா சீதாராமன்
'நடப்பாண்டில் 5ஜி தொழில்நுட்பத்திற்கு ஏலம் நடைபெறும்' - நிர்மலா சீதாராமன்

நாட்டின் எந்த பகுதியில் இருந்தும் பத்திரப்பதிவுகளை மேற்கொள்ள 'ஒரே நாடு ஒரே பதிவு' முறை கொண்டுவரப்படும் என்று தெரிவித்துள்ளார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

நாடாளுமன்றத்தில் 2022-23 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து வரும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அவற்றில் சில முக்கிய அறிவிப்புகள்:-
 
* நடப்பாண்டில் 5ஜி தொழில்நுட்பத்திற்கு ஏலம் நடைபெறும்.

* 2023ம் ஆண்டுக்குள் அனைத்து கிராமங்களிலும் குடிநீர் இணைப்பு வழங்கப்படும்.

* 75 மாவட்டங்களில் டிஜிட்டல் பேங்கிங் யூனிட் ஏற்படுத்தப்படும்.

* நாட்டின் எந்த பகுதியில் இருந்தும் பத்திரப் பதிவுகளை மேற்கொள்ள 'ஒரே நாடு ஒரே பதிவு' முறை கொண்டுவரப்படும்.

* 2025ம் ஆண்டுக்குள் கண்ணாடி ஒளியிழை குழாய் மூலம் அனைத்து கிராமங்களுக்கு இணைய வசதி வழங்கப்படும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com