வெட் கிரைண்டர்களுக்கான ஜிஎஸ்டி வரி 5% ஆக குறைப்பு 

வெட் கிரைண்டர்களுக்கான ஜிஎஸ்டி வரி 5% ஆக குறைப்பு 

வெட் கிரைண்டர்களுக்கான ஜிஎஸ்டி வரி 5% ஆக குறைப்பு 
Published on

வெட் கிரைண்டர்களுக்கான ஜிஎஸ்டி வரி 12% இல் இருந்து 5% ஆக குறைக்கப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

37 ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் கோவாவில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலா சீதாராமன், “வெட் கிரைண்டர்களுக்கான ஜிஎஸ்டி வரி 12% இல் இருந்து 5% ஆக குறைக்கப்படுகிறது. உலர்ந்த புளிக்கான 5 சதவீதம் வரி முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஹோட்டல்களில் ரூ7,500க்கான அறைக்கு தின வாடகைக்கான ஜிஎஸ்டி 28 சதவீதத்தில் இருந்து 18% ஆக குறைக்கப்படுகிறது. ரூ7,500க்கு குறைவாகவுள்ள அறைகளுக்கான ஜிஎஸ்டி 12 சதவீதம் ஆக நிர்ணயம். ஏற்றுமதி செய்வதற்காக இறக்குமதி செய்யப்படும் வெள்ளி நகைகளுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்படாது. 

உள்நாட்டில் தயாரிக்கப்படாத இறக்குமதி செய்யப்படும் பாதுகாப்புத்துறை பொருட்களுக்கான ஜிஎஸ்டி ரத்து செய்யப்படுகிறது. ஹோட்டல் அறையின் தின வாடகை ரூ1000க்கு குறைவாக இருந்தால் ஜிஎஸ்டி வரி கிடையாது” என்று கூறினார். அத்துடன், திருத்தப்பட்ட ஜிஎஸ்டி வரிகள் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வரும் எனவும் அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com