பன்னிரெண்டாக குறையும் பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கை 

பன்னிரெண்டாக குறையும் பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கை 

பன்னிரெண்டாக குறையும் பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கை 
Published on

நாட்டில் பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கை 27இல் இருந்து 12 ஆக குறையவுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான இரண்டாவது ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி முடிவடைந்த போது நாட்டில் 27 பொதுத்துறை வங்கிகள் இருந்தன. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு 2014ஆம் ஆண்டு பொறுப்பேற்ற பின்னர் பொதுத்துறை வங்கிகள் இணைக்க முயற்சிகள் மேற்கொண்டது. ஸ்டேட் பேங்க் ஆஃப் மைசூர், திருவாங்கூர், ஹைதராபாத், ஜெய்ப்பூர், பட்டியாலா ஆகிய 5 வங்கிகளும் பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைக்கப்பட்டன. அதேபோல், விஜயா, தேனா மற்றும் பாங்க் ஆஃப் பரோடா வங்கிகள் இணைக்கப்பட்டன. 

இந்நிலையில், பொதுத்துறை வங்கிகள் இணைப்பு தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமான் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

வங்கிகள் இணைப்பு விவரம் :

பஞ்சாப் நேஷனல் பேங்க், ஓரியண்டல் வங்கி, யுனைடெட் இந்தியா வங்கி - ரூ1.75 லட்சம் கோடி வர்த்தகம் 
கனரா வங்கி மற்றும் சிண்டிகேட் வங்கிகள் - ரூ15.20 லட்சம் கோடி வர்த்தகம்
யுனியன் வங்கி, ஆந்திரா வங்கி மற்றும் கார்ப்பரேஷன் வங்கிகள் - ரூ14.59 லட்சம் கோடி வர்த்தகம்
இந்தியன் வங்கி மற்றும் அலகாபாத் வங்கிகள் - ரூ8.08 கோடி வர்த்தகம்

இதன் மூலம் 10 பொதுத்துறை வங்கிகள் நான்காக குறைக்கப்பட்டுள்ளன. 2014ஆம் ஆண்டு 27 ஆக இருந்த பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கை 12 ஆக குறைகிறது.

முன்னதாக, 14 தனியார் வங்கிகள், தேசியமயமாக்கப்படுவதாக 1969ஆம் ஆண்டு பிரதமராக இருந்த இந்திரா காந்தி அறிவித்தார். 1980ஆம் ஆண்டில் மேலும் 6 வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்டன. பொதுத்துறை வங்கிகள் சிறு கடன்கள் வழங்குவதில் முனைப்பு காட்டி வந்தன. இருப்பினும், சில பொதுத்துறை வங்கிகள் நஷ்டத்தில் இயங்கி வருவதால் அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கருத்து நிலவி வந்தது. அதன் தொடர்ச்சியாகதான் பொதுத்துறை வங்கிகள் தொடர்ச்சியாக இணைக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com