பொருளாதார ஆய்வறிக்கையை மாநிலங்களவையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
பிரதமர் மோடி தலைமையிலான புதிய அரசு கடந்த மே மாதம் 30ஆம் தேதி பதவியேற்றது. இந்த அரசின் முதல் பட்ஜெட் நாளை தாக்க லாகிறது. இதை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். இதற்கு முன்பாக இன்று பொருளாதார ஆய்வறிக்கை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்படுகிறது. முதலாவது மாநிலங்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதையடுத்து இன்று மதியம் மக்களவையில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது.
(கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன்)
பொதுவாக பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முதல்நாள் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படுவது வழக்கம். மத்திய பட்ஜெட் டுக்கு முன்னோட்டமாக இந்த ஆய்வறிக்கைப் பார்க்கப்படும்.
இந்த வருடம் பொருளாதார ஆய்வறிக்கையில் விவசாயம், உற்பத்தி, இறக்குமதி மற்றும் கட்டமைப்பு உள்ளிட்ட துறைகளுக்கு அதிக முக்கிய த்துவம் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஆய்வறிக்கையில் இந்தத் துறைகளின் வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான வழிக ளும் வகுக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. புதிதாக பதவியேற்றுள்ள தலைமை பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியனின் முதல் பொருளாதார ஆய்வறிக்கை இது.