"புதிய இந்தியாவை உருவாக்க மோடி அரசு முயற்சி செய்து வருகிறது" நிர்மலா சீதாராமன்
நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையை வாசிக்க தொடங்கியுள்ளார்.
மோடி தலைமையிலான புதிய அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. இதனை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து வருகிறார். பட்ஜெட் உரையை தொடர்ந்த நிர்மலா சீதாராமன், “புதிய இந்தியாவை உருவாக்க மோடி அரசு முயற்சி செய்து வருகிறது. 2014ஆம் ஆண்டு மோடி அரசு ஆட்சியமைக்கும் போது இந்திய பொருளாதாரம் 1.55 லட்சம் கோடி டாலராக இருந்தது. கடந்த 5 ஆண்டுகளில் இது 2.7லட்சம் கோடி டாலராக உயர்ந்துள்ளது.
சந்திரயான்,ககன்யான் போன்ற விண்வெளி திட்டங்களின் மூலம் விண்வெளித்துறையில் இந்தியா சாதனை படைத்துள்ளது. இன்னும் சில ஆண்டுகளில் இந்தியா 5 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் கொண்ட பொருளாதார நாடு என்ற நிலையை எட்டும். சிறு மற்றும் குறு தொழில்களில் வேலைவாய்ப்பை அதிகரிப்பதுதான் தற்போது எடுக்கப்பட்டுள்ள முதல் இலக்கு” எனக் கூறி பட்ஜெட் உரையை வாசித்து வருகிறார்.