2 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் ரூ.1 லட்சம் கோடியை தாண்டிய ஜிஎஸ்டி வசூல்

2 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் ரூ.1 லட்சம் கோடியை தாண்டிய ஜிஎஸ்டி வசூல்

2 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் ரூ.1 லட்சம் கோடியை தாண்டிய ஜிஎஸ்டி வசூல்
Published on

நவம்பர் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ஒரு லட்சம் கோடியைத் தாண்டியுள்ளதாக மத்திய நிதித் துறை புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. 

கடந்த ஆண்டு செப்டம்பரில் ஜிஎஸ்டி வசூல் 94 ஆயிரத்து 442 கோடி ரூபாயாக இருந்த நிலையில், இந்த ஆண்டு செப்டம்பரில் 91 ஆயிரத்து 916 கோடி ரூபாயாக ‌வசூல் குறைந்தது. 

அதேபோல், சென்ற ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஒரு லட்சத்து 710 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வசூல் செய்யப்பட்ட நிலையில், இந்த அக்டோபரில் 95 ஆயிரத்து 380 கோடி ரூபாயாக வசூல் குறைந்து காணப்பட்டது.

இந்நிலையில் நவம்பரில் ஜிஎஸ்டி வசூல் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 492 கோடி ரூபாயாக உள்ளது. அதில் ஐஜிஎஸ்டி ஏறக்குறைய 50 சதவிகிதமாக இருக்கிறது. இறக்குமதி மூலம் சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாயும், அதற்கான மேல்வரியாக 869 கோடி ரூபாயும் வசூலாகியுள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 2 மாதங்களாக ஒரு லட்சம் கோடிக்கு கீழ் ஜிஎஸ்டி வசூலான நிலையில் அது மீண்டும் ஒரு லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com