இந்தியா பாகிஸ்தான் இடையே மீண்டும் தபால் சேவை தொடங்கியது.
இரு நாடுகளின் எல்லையில் உள்ள வாகாவிலிருந்து பஞ்சாபின் அமிர்தசரஸ் தபால் நிலையத்திற்கு இரண்டு மூட்டைகளில் தபால்கள் வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த தபால்கள் டெல்லியில் சோதனை செய்யப்பட்ட பிறகு சம்பந்தப்பட்ட நபர்களுக்கு விநியோகம் செய்யப்படும் என அமிர்தரசரஸ் தபால் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை எதிர்த்து ஆகஸ்ட் மாதம் 27-ஆம் தேதி முதல் இந்தியா உடனான தபால் சேவையை நிறுத்திய பாகிஸ்தான், தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது.