\
லாலுவின் மகள், மருமகன் மீது 2 வது குற்றப்பத்திரிகை தாக்கல்

லாலுவின் மகள், மருமகன் மீது 2 வது குற்றப்பத்திரிகை தாக்கல்

லாலுவின் மகள், மருமகன் மீது 2 வது குற்றப்பத்திரிகை தாக்கல்
Published on

லாலு பிரசாத் யாதவின் மகள் மற்றும் மருமகன் மீது 2 வது குற்றப்பத்திரிகையை அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ளது.

பீகார் முன்னாள் முதல்வரும் ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவருமான லாலுபிரசாத் யாதவின் மகள் மிசாபாரதி, அவரது கணவர் சைலேஷ்குமார் உள்ளிட்டோர் மீது சட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்கு டெல்லி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் அமலாக்கத்துறை கடந்த டிசம்பர் 23 ஆம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து இருந்தது.

இந்த நிலையில் 2-வது குற்றப்பத்திரிகையை டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை இன்று தாக்கல் செய்தது. இந்த 2 குற்றப்பத்திரிகைகள் குறித்து பிப்ரவரி மாதம் 5 ஆம் தேதி நீதிமன்றம் முடிவு செய்ய உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவிற்கு ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று 3.5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com