இந்தியா
ஆந்திரா: சீனியர் மாணவியை ஜூனியர் மாணவர் கிண்டல் செய்ததால் இரு பிரிவினர்களுக்கு இடையே மோதல்
ஆந்திரா: சீனியர் மாணவியை ஜூனியர் மாணவர் கிண்டல் செய்ததால் இரு பிரிவினர்களுக்கு இடையே மோதல்
ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சொந்த ஊரான கடப்பா அருகே இருக்கும் கல்லூரியில் இரு தரப்பு மாணவர்களிடையே கடும் மோதல் ஏற்பட்டது.
கடப்பா மாவட்டம் இடுபுலபாயாவில் டிரிபிள் ஐ.டி. கல்லூரியில் உள்ள சீனியர் மாணவி ஒருவரை ஜூனியர் மாணவர் கிண்டல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இரு தரப்பு மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர்.
இதில் ஐந்து மாணவர்கள் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தகவலறிந்து வந்த ஆர்.கே. வாயில் போலீசார் இரு பிரிவினரையும் கலைத்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று இரவு முழுவதும் கவுன்சிலிங் செய்து அனுப்பி வைத்தனர்.