\
கறுப்புப் பணத்திற்கு எதிராக போராடுங்கள்: பிரதமர் மோடி வேண்டுகோள்

கறுப்புப் பணத்திற்கு எதிராக போராடுங்கள்: பிரதமர் மோடி வேண்டுகோள்

கறுப்புப் பணத்திற்கு எதிராக போராடுங்கள்: பிரதமர் மோடி வேண்டுகோள்
Published on: 

கறுப்புப் பணத்திற்கு எதிராக தொடர்ந்து போராடுமாறு‌ மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மாதந்தோறும் ’மான் கீ பாத்’எனும் வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். இன்றைய நிகழ்ச்சியில் பேசிய மோடி, சுதந்திரதினத்தினைக் கொண்டாடும் வங்கதேச மக்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார். பணமதிப்பிழப்பு விவகாரத்தில் ஆதரவு அளித்த மக்களுக்கு நன்றி கூறிய அவர், புதிய இந்தியாவுக்கான மாற்றத்தை நாம் ஒவ்வொருவரும் விரும்புவதாகத் தெரிவித்தார்.

டிஜிட்டல் இந்தியா திட்டம் ஊழலை ஒழிப்பதற்கான திட்டம் என்று குறிப்பிட்ட அவர், இந்தியாவில் தற்போது 1.5 கோடி மக்கள் பீம் ஆப்பை பயன்படுத்துவதாகவும், டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைக்கு மக்கள் மாறிவருவதாகவும் பேசினார். கறூப்புப்பணம் மற்றும் ஊழலை மக்கள் நிராகரித்துவிட்டதாகவும், கறுப்பு பணத்திற்கு எதிராக ஒவ்வொரு மக்களும் வீரர் போல் செயல்பட வேண்டும் என்று மோடி, தனது உரையில் குறிப்பிட்டார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com