சொத்துக்காக சிறுவனை கொன்று பிளாஸ்டிக் மூட்டையில் அடைத்த மாமன்!
சொத்துக்காக ஒன்றரை வயது சிறுவனை அவனது மாமாவும் அத்தையும் கொன்று பிளாஸ்டிக் மூட்டையில் அடைத்து வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரப்பிரதேசம் மலாத் பகுதியைசேர்ந்தவர் தர்மேந்திரா கண்டு. இவரது ஒன்றரை வயது மகன் விவான். இதே பகுதியில் தர்மேந்திரா கண்டுவின் உறவினர்களான விக்கியும் அவரது மனைவ்யும் வசித்து வருகின்றனர். தர்மேந்திரா கண்டு வேலை செய்யும் நிறுவனத்தில் விக்கியும் பணியாற்றி வந்துள்ளனர்.
இருவரும் நெருங்கிய உறவினர்கள் என்பதாலும், ஒரே நிறுவனத்தில் வேலை செய்வதாலும் குழந்தை விவான், விக்கியின் வீட்டில் அதிக நேரம் விளையாடுவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் விவான் கடந்த திங்கட்கிழமை காணாமல் போயிருக்கிறார். பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனை அடுத்து விவானின் தந்தை விகியின் தந்தை தர்மேந்திரா கண்டு குழதை காணமல் போனது குறித்து மலத் போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து போலீசார் பல இடங்களில் தேடியும் விவாவனை கண்டுபிடிக்க இயலவில்லை. உதவிக்கு போலீசார் மோப்ப நாயை அழைத்து வந்தனர். அந்த நாய் விக்கியின் வீட்டை நோக்கி ஓடியது. வீட்டின் பின்பகுதிக்கு சென்று பிளாஸ்டிக் பையை பார்த்து குறைத்ததுள்ளது. அந்த பையில் பிணமாக விவான் பிணமாக மூடி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்ததது.
இதுகுறித்து போலீசார் கூறும்போது, விவான் எப்போதும் விக்கி வீட்டில்தான் விளையாடுவான். அதனால் அவனைக் காணவில்லை என்று தெரிந்த உடன் அங்கும் தேடிச்சென்றுள்ளனர். ஆனால், அப்போது இங்கு வரவில்லை என விக்கி வீட்டில் இருந்தவர்கள் கூறி உள்ளனர். இதனால், அவர்கள் மீது சந்தேகம் எழவில்லை. இறுதியில் அவர்கள் தான் சொத்துக்காக விவானை கொலை செய்து பிளாஸ்டிக் பையில் மூடி வைத்தது தெரிய வந்தது எனக் கூறுகின்றனர். மேலும் அவர்கள்,
உத்திரப்பிரதேசத்தில் தர்மேந்திரா கண்டுவின் தண்ட்தை சந்தீபுக்கு சில சொத்துக்கள் இருக்கிறது அது விக்கி உறவினர் என்பதால் அந்த சொத்து தொடர்பாக விவானின் தாய் சோனிக்கும், விக்கியின் மனைவி இந்துவுக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன் பிரச்னை எழுந்துள்ளது. இதனை மனதில் வைத்து விவானை விக்கியின் குடும்பத்தினர் கொலை செய்துள்ளனர்’ என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.