Headlines | அமித் ஷா தமிழகம் வருகை முதல் வரி அதிகரிப்பை திடீரென ஒத்திவைத்த ட்ரம்ப் வரை!
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக பாம்பன் மீனவர்கள் 14 பேர் படகுடன் கைது. இலங்கை கடற்படை மீண்டும் மீண்டும் நடவடிக்கை.
தமிழ்நாட்டில் எட்டு இடங்களில் சதமடித்த வெயில். ஈரோடு, கரூர், மதுரை, திருப்பத்தூர், வேலூர், சேலம், திருச்சியில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவு.
கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பர்கள் வீட்டில் நடந்த அமலாக்கத் துறை சோதனை நிறைவு. பல்வேறு முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் எடுத்துச் சென்றதாக தகவல்.
சென்னையில் மின்வாரிய அதிகாரி வீடு, மது ஒப்பந்ததாரர் நிறுவனத்தில் அமலாக்கத் துறை சோதனை. விழுப்புரத்தில் தனியார் மதுபான ஆலைகளிலும் தொடரும் ரெய்டு.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை. அரக்கோணம் ராஜாதித்ய சோழன் சி.ஐ. எஸ்.எஃப். மைய விழாவில் பங்கேற்கிறார்.
திருவாரூரில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் களஆய்வு. காலையில் மனு அளித்தவர்களுக்கு மாலையிலேயே பட்டா வழங்கி நடவடிக்கை.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமான நிலையில் உள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சாடல். நாள்தோறும் அரங்கேறும் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு முதல்வர் எந்த பதிலும் சொல்வதில்லை என்று குற்றச்சாட்டு.
பொள்ளாச்சியில் இரட்டை மென்பொருள் பயன்படுத்தி, 217 கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு செய்ததாக நகைக்கடையின் பங்குதாரர் கைது. மத்திய ஜிஎஸ்டி ஆணையரக அதிகாரிகளின் சோதனையில் அம்பலம்.
மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அனைவரும் மராத்தி மொழியை கட்டாயம் கற்க வேண்டும். அனைவருக்கும் மராத்தி தெரிய வேண்டுமென அவசியம் இல்லை என்று ஆர்எஸ்எஸ் தலைவர் கூறியிருந்த நிலையில் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் பதிலடி.
மாமியாரின் பிறந்தநாளுக்கு தங்கம், வைரநகை என 1 கோடி ரூபாய் மதிப்பிலான பரிசுகளை வழங்கி அசத்திய மருமகள். ஆந்திராவில் ஒட்டுமொத்த குடும்பங்களையும் வியக்க வைத்த மருமகளின் பாசம்.
கனடா மற்றும் மெக்சிகோ மீது விதிக்கப்பட்ட இறக்குமதி வரி அதிகரிப்பு திடீர் ஒத்திவைப்பு. ஏப்ரல் 2ஆம் தேதி வரை நிறுத்தி வைக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.
இந்திய கால்பந்து அணிக்கு மீண்டும் திரும்புகிறார் சுனில் சேத்ரி. கடந்தாண்டு ஓய்வு முடிவை எடுத்த நிலையில், இந்திய கால்பந்து கூட்டமைப்பு திடீர் அறிவிப்பு.