Headlines|கர்ப்பவதியை கீழே தள்ளிவிட்ட கொடூரம் முதல் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்ட சுப்மன் கில் வரை!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை நிறுத்தி வைத்தது ஏன்? என்று விளக்கமளிக்க ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு உச்ச நீதிமன்றம் இன்று கெடு.
கட்சி தொடங்கியதும் ஆட்சிக்கு வர வேண்டும் என நினைப்பவர்களுக்கு மக்கள் பதில் அளிப்பார்கள் என விஜயை மறைமுகமாக விமர்சித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
பயிர்க்கடனை தள்ளுபடி செய்யாமல் விவசாயிகளை தமிழக அரசு வஞ்சிப்பதாக அண்ணாமலை குற்றச்சாட்டு. இதற்கு , பயிர்க்கடன் தள்ளுபடி செய்த முதலமைச்சரை பாராட்ட மனமின்றி நீலிக்கண்ணீர் வடிப்பதாக அமைச்சர் பெரியகருப்பன் கண்டனம்.
வேலூர் அருகே ஓடும் ரயிலில் பாலியல் தொல்லை கொடுத்து கர்ப்பவதியை கீழே தள்ளிவிட்ட கொடூரம். கை, கால் முறிவு ஏற்பட்ட நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தீவிர சிகிச்சை.
திருச்சி மணப்பாறையில் தனியார் பள்ளியை சூறையாடிய கிராம மக்கள். நான்காம் வகுப்பு மாணவிக்கு பள்ளி நிர்வாகியின் கணவர் பாலியல் தொல்லை கொடுத்ததால் ஆத்திரம்.
சமூக செயல்பாட்டாளர் ஜகபர் அலி கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு பிப்ரவரி 20 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல். கைதான ஐந்து பேரும் புதுக்கோட்டை மாவட்ட சிறையில் அடைப்பு.
கடலூர் மாவட்டம் வடலூர் அருகே தண்ணீர் என நினைத்து டீசலை குடித்த ஒன்றரை வயது குழந்தை, சிதம்பரம் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சோகம்.
ஆம் ஆத்மி வேட்பாளர்களை விலைக்கு வாங்க பாஜகவினர் முயற்சிக்கின்றனர் என்று, நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில் அர்விந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு.
இந்தியர்களுக்கு கைவிலங்கு இடப்பட்டது குறித்து நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமளி. இந்தியாவின் சுய மரியாதைக்கு இழுக்கு ஏற்பட்டுள்ள நிலையில் அரசு என்ன செய்யப்போகிறது எனக் கேள்வி.
திருப்பி அனுப்பப்படுபவர்களுக்கு கை விலங்கிட்டு அனுப்புவது அமெரிக்க நடைமுறை என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தகவல். இனி, இந்தியர்களை மரியாதையோடு நடத்துவது குறித்து அமெரிக்காவிடம் பேசி வருவதாக நாடாளுமன்றத்தில் விளக்கம்.
அமெரிக்காவில் பெண்கள் பங்கேற்கும் விளையாட்டுப் போட்டிகளில் திருநங்கைகள் பங்கேற்க தடை. அதிபர் ட்ரம்ப்பின் உத்தரவை செயல்படுத்த நீதி, கல்வித்துறைகளுக்கு ஆணை.
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை வெற்றியுடன் தொடங்கியது இந்திய அணி. அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மன் கில் ஆட்டநாயகனாக தேர்வு.