Headlines | பாஜக எம்பியின் சர்ச்சை கருத்து முதல் ஈரோடு, டெல்லி தேர்தல்கள் வரை!
காலை 7 மணிக்கு தொடங்குகிறது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு. பதற்றமான வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு தீவிரம்.
நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி பேர் வறுமையில் இருந்து மீண்டுள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம். நடுத்தர மற்றும் சாமானிய மக்களை அரசு முன்னேற்றியுள்ளதாகவும் மக்களவையில் பேச்சு.
ஆளுநர் - மாநில அரசு இடையிலான மோதல் போக்கால் மக்களுக்கே பாதிப்பு. மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போடுவதாக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து.
ஆளுநர் எந்த அடிப்படையில் முடிவுகளை எடுக்கிறார் என்பதை, நாளை தெரிவிக்க மத்திய அரசு தலைமை வழக்கறிஞருக்கு உச்ச நீதிமன்றம் ஆணை. அரசியல் சாசனப்படி மாநில அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தல்.
சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களை வெளியேற்றும் நடவடிக்கையை தொடங்கியது அமெரிக்கா. முதற்கட்டமாக 200க்கும் மேற்பட்ட இந்தியர்களுடன் அனுப்பி வைக்கப்பட்ட ராணுவ விமானம், அமிர்தசரஸில் தரையிறக்கப்படுவதாக தகவல்.
பிரயாக்ராஜ் கும்பமேளாவில் இன்று பங்கேற்கிறார் பிரதமர் மோடி. திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வழிபாடு நடத்துகிறார்.
கும்பமேளாவில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது மிகப்பெரிய விஷயம் அல்ல என்ற பாஜக எம்.பி. ஹேமமாலினி கருத்தால் சர்ச்சை.
திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக மதுரை பழங்காநத்தத்தில் இந்து அமைப்பினர் போராட்டம் திருப்பரங்குன்றம் மலையை மீட்டெடுக்க வலியுறுத்தி முழக்கம்.
ஒற்றுமையுடன் வாழ்ந்து வருவதாக திருப்பரங்குன்றம் வாழ் இந்து, இஸ்லாமியர்கள் பேட்டி. வெளியில் இருந்து வந்தவர்களே பிரச்சினையை கிளப்புவதாக குற்றச்சாட்டு.
திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்களுக்கு அனுமதியில்லை என வெளியான தகவலுக்கு கோயில் நிர்வாகம் மறுப்பு. பக்தர்கள் வழக்கம் போல் இடையூறின்றி சுவாமி தரிசனம் செய்வதாக விளக்கம்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கில் பத்திரிகையாளர்களை துன்புறுத்தக் கூடாது. பறிமுதல் செய்த பத்திரிகையாளர்களின் செல்போன்களை திரும்ப ஒப்படைக்க என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலகத்தில் நுழைந்து வி.ஏ. ஓ. மீது மாட்டுச்சாணம் வீசி தாக்குதல். பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஆத்திரத்தில் தாக்குதல் நடத்திய கிராம உதவியாளர் கைது.
நீலகிரி வரும் பேருந்துகளில் பயணிப்பவர்களிடம் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் இருந்தால், அந்த பேருந்தையே பறிமுதல் செய்ய வேண்டும் என பிளாஸ்டிக் பயன்பாட்டை கட்டுப்படுத்தும் விதமாக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
கரூரில் காவல் ஆய்வாளர் உள்பட 8 போலீசார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம். குட்கா கடத்தியவர்களிடம் இருந்து கைப்பற்றிய பணத்தை கணக்கில் காட்டவில்லை என எழுந்த புகாரில் டிஐஜி நடவடிக்கை.
மயிலாடுதுறை மாவட்டம் திருவாவடுதுறை ஆதீனத்தில் பட்டணப் பிரவேச விழா. ஆதீனத்துக்கு பூரண கும்ப மரியாதை அளித்து பொதுமக்கள் வழிபாடு.
பழம்பெரும் நடிகை புஷ்பலதா காலமானார். வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவால் உயிர் பிரிந்தது.
ஸ்வீடனில் பள்ளி வளாகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் உயிரிழப்பு. நாட்டிற்கு வலியை ஏற்படுத்திய தினம் என ஸ்வீடன் பிரதமர் இரங்கல்.
நடிகர் அஜித்குமாரின் விடாமுயற்சி திரைப்படத்தை தமிழ்நாட்டில் 1,000 திரையரங்குகளில் வெளியிட ஏற்பாடு. நாளை திரைப்படம் வெளியாகும் நிலையில் 3 நாட்களில் 3 லட்சத்து 61 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனை.