Headlines|கனமழை எச்சரிக்கை முதல் செபியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி வரை!
தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரியில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணிப்பு.
கனமழை எச்சரிக்கை எதிரொலி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக காவிரி படுகை மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்திய முதல்வர்...
நடிகை அளித்த புகாரில் சீமான் வீட்டில் ஒட்டிய சம்மனை கிழித்து காவலர்களை தடுத்த விவகாரம். சீமான் வீட்டு காவலாளி மற்றும் உதவியாளருக்கு வரும் 13 ஆம் தேதி வரை நீதிமன்றக்காவல்.
சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் இன்று ஆஜராக முடியாது என சீமான் திட்டவட்டம். காவல் துறைக்கு என்ன அவசரம் என்றும் கேள்வி.
உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் சட்டத்திருத்தம் செய்யப்படும். பிறந்தநாளை முன்னிட்டு புதிய அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்.
தமிழகத்தில் அரிசி விலை கிலோவுக்கு 2 ரூபாய் வரை குறைந்தது. இன்னும் ஆறு மாதங்கள் வரை விலை குறைவு நீடிக்கும் என வணிகர்கள் தகவல்.
பள்ளி, கல்லூரிகளின் பெயர்களில் இடம்பெற்றுள்ள சாதிப் பெயர்களை நீக்குவது தொடர்பாக தமிழக அரசின் நிலைப்பாடு என்ன?. ஒரு வாரத்தில் தெரிவிக்குமாறு கெடு விதித்த சென்னை உயர்நீதிமன்றம்.
சென்னை போராட்டத்தில் பங்கேற்க புறப்பட்ட, திண்டுக்கல் மாவட்ட மாதர் சங்க நிர்வாகி வீட்டுக்காவலில் வைக்கப்பட்டதால் சலசலப்பு. எஸ்பி.யிடம் பேசிவிட்டு, சச்சிதானந்தம் எம்பி காரில் அழைத்துச் செல்ல முயன்றபோது காவலர்கள் தடுத்ததால் வாக்குவாதம்.
வேலூர் பாலாற்றங்கரையில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட மயான கொள்ளை திருவிழா. மின்விளக்குகளால் அலங்கரிப்பட்ட 60 அடி உயர பல்லக்கில் வலம் வந்த உற்சவ மூர்த்திகள்.
செபியின் புதிய தலைவராக ஐஏஎஸ் அதிகாரி துஹின் காந்தபாண்டே நியமனம். அடுத்த 3 ஆண்டுகளுக்கு பதவி வகிப்பார் என மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு.
கனடா, மெக்சிகோ மீதான 25 சதவீத கூடுதல் வரிவிதிப்பு வரும் 4ஆம் தேதி முதல் அமலாகும். சீனப்பொருட்கள் மீதான வரிவிதிப்பு நடவடிக்கையையும் அறிவித்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.