இந்திய காலை தலைப்புச் செய்திகள்
இந்திய காலை தலைப்புச் செய்திகள்முகநூல்

Headlines|அபார வெற்றி பெற்ற இந்திய அணி முதல் வேதனை தெரிவித்த இத்தாலி பிரதமர் .

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, அபார வெற்றி பெற்ற இந்திய அணி முதல் வேதனை தெரிவித்த இத்தாலி பிரதமர் வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.
Published on
  • சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்தியா அபாரம். கோலியின் சிறப்பான ஆட்டத்தால் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தல்.

  • பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சதம் அடித்து அசத்திய விராட் கோலி ஆட்டநாயகன் விருது வென்றார். 14ஆயிரம் ரன்களை விரைவாக குவித்தவர் என்ற சாதனையையும் படைத்தார்.

  • சென்னை மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரையில் இந்தியா - பாகிஸ்தான் போட்டியை கண்டுகளித்த ரசிகர்கள். பிரம்மாண்ட திரைகளில் பார்த்து உற்சாகம். வெற்றியை கொண்டாடி அமர்க்களம்.

  • பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றதை நாடு முழுவதும் கொண்டாடிய ரசிகர்கள். பல்வேறு இடங்களில் பட்டாசுகள் வெடித்து மகிழ்ச்சி.

  • பாகிஸ்தான் அணியை வீழ்த்திய உத்வேகம் சாம்பியன் டிராபியை வெல்ல உதவும் என முதல்வர் ஸ்டாலின் பாராட்டு. இந்திய கிரிக்கெட்டுக்காக துடிக்கும் இதயங்களுக்கு மகத்தான வெற்றி என ராகுல் காந்தி வாழ்த்து.

  • மதத்தை கேலி செய்து மக்களை பிளவுபடுத்தும் பணிகளில் பிரிவினைவாத சக்திகள் ஈடுபட்டுள்ளன. ஒற்றுமையை சீர்குலைப்பதே நோக்கமாக கொண்டிருப்பதாகவும் பிரதமர் நரேந்திர மோடி குற்றச்சாட்டு.

  • சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அதிகாரமில்லை என முதல்வர் ஸ்டாலின் கூறுவது கோழைத்தனம் என சோழமண்டல சமய - சமுதாய நல்லிணக்க மாநாட்டில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சனம்.

  • காங்கிரஸ் முன்னணித் தலைவர்களை விமர்சித்தால் கட்சி விரோத நடவடிக்கைகளாக கருதப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை எச்சரிக்கை.

  • ராமேஸ்வரம் மீனவர்கள் நள்ளிரவு முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம். இலங்கை கடற்படையினர் கைது நடவடிக்கைக்கு கண்டனம்.

  • ட்ரம்ப், மோடி பேச்சுக்கள் ஜனநாயகத்திற்கான அச்சுறுத்தல் என விமர்சிக்கப்படுவதாக இத்தாலி பிரதமர் மெலோனி வேதனை. இடதுசாரிகள் வீசிய சேற்றை மக்கள் வெற்றிகள் மூலமாக துடைக்கிறார்கள் என்றும் பேச்சு..

  • ஜெர்மனியில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு. ப்ரெட்ரிக் மெர்ஸ் ((Friedrich Merz)) தலைமையிலான கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் ஆட்சி அமைக்கும் என கருத்துக்கணிப்பு.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com