பற்றி எரியும் மும்மொழிக் கொள்கை பிரச்னை To அமெரிக்காவின் உயர் பதவியில் இந்திய வம்சாவளி நபர் வரை!
கல்விக்கொள்கை என்ற பெயரில் இந்தி மொழியை திணிப்பது அரசியல் இல்லையா என முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்நாட்டிற்கு மும்மொழிக் கொள்கை என்பது தேவையற்ற ஒன்று என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ஏழை, எளிய, பட்டியலின மக்களுக்கு மூன்றாவது மொழி மறுக்கப்படுவது, நவீன தீண்டாமையின் உச்சம் என, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.
சி.பி.எஸ்.இ. பள்ளிகளை தொடங்க மாநில அரசின் அனுமதி தேவையில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஆண்மையுள்ள மாநிலம் தமிழ்நாடு என அமைச்சர் கோவி.செழியன் பேசிய நிலையில், அதனை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மேடையிலேயே திருத்தினார்.
இந்தாண்டு மக்கள் நீதி மய்யத்தின் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்கும் என, அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
திண்டுக்கல் மத்திய காந்திகிராம கிராமிய நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் பழங்குடியினரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
சென்னை நீலாங்கரை கடற்கரையில், நண்பனை கடல் அலை இழுத்துச் சென்று விட்டதாக கூறி, போதையில் காவல் துறையினரை இளைஞர் அலைக்கழித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
சென்னை அடுத்த ஆவடியில், ஹெல்மெட் அணியாமல் வந்ததால் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த பெண் காவலருடன் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.
கும்பமேளாவில் புனித நீராட நாடெங்குமிருந்து கோடிக்கணக்கானோர் குவிகின்றனர்.
ரயிலில் முன்பதிவு இல்லா பெட்டிகளின் எண்ணிக்கை குறைக்கப்படுவதாக வெளியான தகவல், அடிப்படை ஆதராமற்றது என தெற்கு ரயில்வே கூறியுள்ளது.
பெங்களூருவில் மதரஸா பள்ளியில் மாணவிகள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ.யின் 9ஆவது இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காஷ் படேல் முறைப்படி பதவியேற்றுக் கொண்டார்.
காஷ்யப் பட்டேல் FBI இயக்குநராக நியமிக்கப்பட்டதற்கு பாலிவுட் படப்பாணியில் வித்தியாசமான முறையில் ட்ரம்ப்பின் உதவியாளர் டான் ஸ்காவினோ (DAN SCAVINO) வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சாம்பியன்ஸ் ட்ராபி கிரிக்கெட் தொடரின் பி பிரிவு ஆட்டத்தில், ஆப்கானிஸ்தானை 107 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா வீழ்த்தியது.
வெறும் 2 ரன்களால் 74 வருட ரஞ்சி கோப்பை வரலாற்றில், முதல் முறையாக இறுதி போட்டிக்கு முன்னேறி கேரளா சாதித்துள்ளது.
கெட் அவுட் ஸ்டாலின் என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டானது. இதுதொடர்பான வீடியோவை வெளியிட்டுள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, 10 லட்சத்திற்கும் அதிகமான பதிவுகள் எக்ஸ் வலைதளத்தில் இடம்பெற்றிருப்பதாக தெரிவித்துள்ளார்.
ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்தின் நெய் தயாரிப்பிற்கான உரிமம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட உத்தரவு, தொடர்வதாக உயர் நீதிமன்ற மதுரை அமர்வு கூறியுள்ளது
ஆவின் நிர்வாகத்துடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் திட்டமிட்டபடி வரும் 24 ஆம் தேதி பால் விநியோகம் நிறுத்தப்படும் என தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் நல சங்கங்கள் அறிவித்துள்ளன.
கர்நாடக அரசு தனது தயாரிப்பான நந்தினி பால் விலையை லிட்டருக்கு 5 ரூபாய் வரை உயர்த்த முடிவு செய்துள்ளது.
உத்தர பிரதேசத்தில் தனது காரில் பயணித்த கர்ப்பிணியின் பிரசவத்திற்கு உதவிய ரேபிடோ ஓட்டுநருக்குபாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
உத்தர பிரதேசத்தில், தாம் வெற்றிபெற்ற ரே பரேலி தொகுதிக்கு சென்ற ராகுல் காந்தி, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி தேர்தல் நேரத்தில் சரியான முடிவை எடுப்பதில்லை என விமர்சித்தார்.
ராஜஸ்தான் சட்டப்பேரவைக்குள் அமர்ந்து காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். அமெரிக்கா விரைவில் பரஸ்பர வரிவிதிப்பை மேற்கொள்ளுமென அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
பிரேசில், இந்தியா உள்ளிட்ட நாடுகள் அங்கம் வகிக்கும் பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளுக்கு 150 சதவிகித வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஹாங்காங் நாட்டை சேர்ந்த விஞ்ஞானிகள் மணிக்கு 70 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கக்கூடிய புதுமையான ட்ரோனை உருவாக்கியுள்ளனர்.
அமெரிக்காவின் எதிரிகள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் ஒழித்துக்கட்டுவோம் என்ற உறுதிமொழியுடன் FBI இயக்குநராக பதவியேற்றுள்ளார் காஷ்யப் பட்டேல்.
கோவையில் 17 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான விவகாரத்தில் அறிக்கை சமர்ப்பிக்க, தமிழக டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ஐபோன் 16 சீரிஸ் செல்போன்கள் முழுமையாக இந்தியாவிலேயே தயார் செய்யப்படுவதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் திமுகவினர் போராட்டங்களை நடத்தினர்.