Headlines
HeadlinesFacebook

Headlines|மத்திய அரசுக்கு கடிதம் எழுதிய முதல்வர் முதல் அசத்தல் வெற்றிப்பெற்ற இந்திய அணி வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்திகளானது, மத்திய அரசுக்கு கடிதம் எழுதிய முதல்வர் முதல் அசத்தல் வெற்றிப்பெற்ற இந்திய அணி வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.
Published on
  • இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம்.

  • கேட்ட நிதியை வாங்கித் தர முடியாமல் பிரச்சினையை திசை திருப்ப முயற்சி. அண்ணாமலைக்கு தைரியம் இருந்தால் அண்ணா சாலை பக்கம் வரட்டும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சவால்.

  • அண்ணா சாலையில் எந்த இடம் என குறிப்பிட்டால் தனியாக வருகிறேன். துணை முதல்வர் உதயநிதி சவால் விடுத்ததையடுத்து, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதில்.

  • கவுன்சிலர் கூட ஆக முடியாத அண்ணாமலை, துணை முதல்வரை விமர்சிக்க தகுதி இல்லை. திமுக செய்தி தொடர்பு இணை செயலாளர் தமிழன் பிரசன்னா பேச்சு.

  • தீண்டாமையை தடுக்க மாணவர்கள் துணிவுடன் செயல்பட வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுரை.

  • சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது குறித்த அறிவிப்பை சட்டமன்ற கூட்டத் தொடரில் வெளியிட வேண்டும். இல்லையென்றால் தமிழ்நாடு முழுவதும் தொடர் போராட்டங்களை முன்னெடுக்கப் போவதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை.

  • பள்ளி, கல்லூரிகளில் இடம்பெற்றுள்ள சாதிப் பெயர்கள் நீக்கப்படுமா? தமிழக அரசு விளக்கம் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

  • சாம்சங் நிர்வாகத்தின் பழிவாங்கும் நடவடிக்கைக்கு எதிராக தொடரும் போராட்டம். 13 பேரை பணியிடை நீக்கம் செய்ததற்கு எதிராக அடுத்தகட்ட போராட்டத்தை அறிவித்தது சிஐடியு.

  • ரயிலில் அதிகளவு கூட்டம் இருந்ததால் சென்னை திரும்ப முடியாமல் வாரணாசியில் தவித்த தமிழக மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்கள். விமான மூலம் சென்னை அழைத்து வந்த அரசுக்கு நன்றியை தெரிவித்தனர்.

  • ராசிபுரம் அருகே திமுக கவுன்சிலர் மகன் மற்றும் மதுபான பார் உரிமையாளர் இடையே மோதல். மருத்துவமனையில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சிகள்.

  • அருப்புக்கோட்டை அருகே அங்கீகாரம் இல்லாத கல்லூரியில் செலுத்திய கல்விக்கட்டணத்தை திருப்பித் தர வலியுறுத்தல் . பெற்றோருடன் சாலை மறியலில் ஈடுபட்ட நர்சிங் மாணவிகளை கைது செய்ய முயன்ற காவல் துறை.

  • சேலம் ஆத்தூரில் குடும்பத் தகராறில் 2 குழந்தைகளை வெட்டிப் படுகொலை செய்த தந்தை கைது. மற்றொரு குழந்தை மற்றும் தாயின் உடல் நிலை கவலைக்கிடம்.

  • கேரளாவில் தலையில் ஆழமான காயத்துடன் பிடிக்கப்பட்ட காட்டு யானைக்கு தீவிர சிகிச்சை. மருத்துவ சிகிச்சைக்கு யானை நல்ல முறையில் ஒத்துழைப்பதாக மருத்துவர்கள் விளக்கம்.

  • காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி டெல்லி மருத்துவமனையில் அனுமதி. வழக்கமான உடல் பரிசோதனை என்றும், இன்று மாலைக்குள் வீடு திரும்புவார்கள் என்றும் காங்கிரஸ் வட்டாரங்கள் தகவல்.

  • வன்முறையில் ஈடுபட்டு ரயில்வே சொத்துகளை சேதப்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டெல்லியில் விரைவு ரயிலின் ஏசி பெட்டிகளை சேதப்படுத்தியதன் எதிரொலியாக ரயில்வே அமைச்சகம் எச்சரிக்கை.

  • டெல்லி முதல்வராக பாஜகவின் ரேகா குப்தாவும், பர்வேஷ் வர்மா உள்பட ஆறு பேர் அமைச்சர்களாகவும் பதவியேற்பு. பிரதமர் மோடி மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

  • டெல்லி முதல்வர் ரேகா குப்தா, யமுனை நதியில் சிறப்பு வழிபாடு. புதியதாக பதவியேற்ற அமைச்சர்களும், நதிக்கரையில் ஆரத்தி எடுத்து வழிபட்டனர்.

  • மஹாராஷ்டிர வேளாண்துறை அமைச்சருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை. மோசடி செய்து அரசு வீடு வாங்கிய வழக்கில் நாசிக் நீதிமன்றம் தீர்ப்பு.

  • நாட்டையோ அல்லது ஒரு பிரதேசத்தையோ கைப்பற்ற சிறந்த வழி அதன் கலாசாரம், மொழியை அழிப்பது. மற்ற நாடுகளைவிட கலாசாரம், மொழி விவகாரத்தில் இந்தியா தனித்துவமானது என குடியரசுத் துணைத்தலைவர் ஜெகதீப்சிங் தன்கர் பெருமிதம்.

  • ஜம்மு-காஷ்மீரின் பல்வேறு இடங்களில் கடும் பனிப்பொழிவால் இன்னல்களை சந்திக்கும் மக்கள். ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் பனிக்குவிந்து போக்குவரத்து பாதிப்பு.

  • அமெரிக்காவில் பணிநீக்க நடவடிக்கையை தொடரும் அதிபர் ட்ரம்ப். வருவாய் சேவைத் துறையில் பணியாற்றி வந்த சுமார் 6 ஆயிரம் ஊழியர்களை டிஸ்மிஸ்.

  • ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் முடிவுக்கு வரும் சூழலில் இருப்பதாக அமெரிக்கா துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் கருத்து. கடந்த மூன்று ஆண்டுகளில் முதல்முறையாக ஐரோப்பிய பிராந்தியத்தில் அமைதி ஏற்பட்டு இருப்பதாகவும் பேச்சு.

  • ரஷ்யா-சீனா வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்திப்பு.. உக்ரைன் போர், அமெரிக்காவின் நடவடிக்கை குறித்து ஆலோசனை.

  • உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து உரையாடினார் அமெரிக்காவின் பிரதிநிதி கீத் கெல்லாக். இருநாட்டு உறவில் விரிசல் ஏற்பட்ட நிலையில் சந்தித்து ஆலோசனை.

  • சீனாவின் கனவுத்திட்டமான பூமிக்கு அடியில் ஆழமான ஆழ்துளை கிணறு தோன்றும் பணி தீவிரம். பூமியின் பரிணாம வளர்ச்சி குறித்து ஆய்வு செய்ய நடவடிக்கை.

  • சாம்பியன்ஸ் டிராபி தொடரில் வங்கதேசத்தை வீழ்த்தியது இந்திய அணி. 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தல்.

  • வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் இந்திய வீரர் சுப்மன் கில் சதம் விளாசி அசத்தல். வெற்றிக்கு வித்திட்ட வீரருக்கு பலரும் பாராட்டு.

  • ரோகித் சர்மா தவறவிட்ட கேட்சால் பறிபோனது அக்ஷர் படேலில் சாதனை. மைதானத்தில் மன்னிப்பு கோரியது மட்டுமின்றி, இரவு விருந்துக்கு அழைத்துச் செல்வதாகவும் கூறிய கேப்டன் ரோகித் சர்மா.

  • சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று தென்னாப்பிரிக்கா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதல். கராச்சி மைதானத்தில் மதியம் 2.30 மணிக்கு பலப்பரீட்சை.

  • சினிமா ரசிகர்களுக்கு விருந்தாக திரைக்கு வரும் புதிய படங்கள். டிராகன், நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் உள்ளிட்ட 4 படங்கள் இன்று வெளியீடு.

  • மலையாளத்தில் வெற்றிகளை குவித்த த்ரிஷ்யம் படத்தின் 3 ஆம் பாகம் உருவாகிறது. கடந்த காலம் அமைதியாக இருக்காது என்று பதிவிட்டு படத்தின் பணிகள் தொடங்கியதை உறுதி செய்தார் நடிகர் மோகன்லால்.

  • திரைப்பட இயக்குநர் ஷங்கருக்கு சொந்தமான 10 கோடி ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துக்கள் முடக்கம். எந்திரன் படத்தின் கதை குறித்த விவகாரத்தைத் தொடர்ந்து இயக்குநர் ஷங்கர் மீது அமலாக்கத் துறை நடவடிக்கை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com