Headlines|அண்ணாமலையை நோக்கி கேள்வி எழுப்பிய சீமான் முதல் ராஜினாமா செய்யத் தயார் என்ற மம்தா வரை !
தேர்தல் ஆணையர்கள் நியமன சட்டத்துக்கு எதிரான வழக்கு. உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை.
நாட்டின் 26ஆவது தலைமைத் தேர்தல் ஆணையராக இன்று பதவியேற்கிறார் ஞானேஷ் குமார்.
டெல்லிக்கு புதிய முதல்வரை தேர்வு செய்வதில் பாஜக தீவிர ஆலோசனை. நாளை பதவியேற்பு விழா நடைபெறும் நிலையில் இன்று சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம்.
டெல்லியின் அடுத்த முதல்வராக பதவியேற்கப் போவது யார்?. பர்வேஷ் வர்மா, ஆஷிஷ் சூட், ரேகா குப்தா ஆகியோரில் ஒருவர் தேர்வு செய்யப்பட்ட வாய்ப்பு.
ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க 498 கோடியே 80 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு. 5 லட்சத்து 18 ஆயிரத்து 783 விவசாயிகள் பயன் பெறுவார்கள் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு.
மத்திய அரசுக்கு எதிராக சென்னையில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் ஆர்ப்பாட்டம். தேசியக் கல்விக் கொள்கையை ஒருபோதும் ஏற்க முடியாது என திட்டவட்டம்.
இந்தியை ஏற்றுக் கொண்டால் தாய் மொழி தமிழை விரைவில் இழந்துவிடுவோம் என்றும், தமிழ்நாடு ஒருபோதும் மும்மொழிக் கொள்கையை ஏற்காது எனவும் துணை முதல்வர் உதயநிதி திட்டவட்டம்.
மும்மொழிக் கொள்கை மூலம் தமிழகத்தில் இந்தி திணிக்கப்படாது என அண்ணாமலை உறுதி. தவெக தலைவர் விஜய் சிபிஎஸ்இ பள்ளி நடத்துவது எத்தனை பேருக்கு தெரியும் என்றும் கேள்வி.
தனது மகன் எங்கு படித்தால், அண்ணாமலைக்கு என்ன என்று சீமான் கேள்வி.
60 ஆண்டுகளாக தமிழ், தமிழ் என்று பேசுகிறார்களே தவிர தமிழருக்கும் தமிழ் இலக்கியத்திற்கும் எந்த சேவையும் செய்யவில்லை என்று, சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சனம்.
ஆளுநருக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வ வாதங்களை சமர்ப்பித்தது தமிழ்நாடு அரசு. கடந்த 10ஆம் தேதி வாதங்கள் நிறைவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் எழுத்துப்பூர்வ வாதங்கள் சமர்ப்பிப்பு.
மார்ச் 14ஆம் தேதி தமிழக நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு. 15ஆம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டுவில் கட்டட தொழிலாளர்கள் இருவர் அடித்துக் கொலை. நவீன் எனும் இளைஞரை கைது செய்து காவல் துறை விசாரணை.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே மூதாட்டியிடம் நகை பறிப்பு. வழிப்பறியில் ஈடுபட்ட இருவரை பிடித்து தாக்கி, காவல் துறையிடம் ஒப்படைத்த மக்கள்.
வேலூரில் பெண் மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் அதிரடி தீர்ப்பு. குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட சிறுவனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை.
மயிலாடுதுறை இரட்டைக் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது. பெரம்பூர் காவல் ஆய்வாளரைத் தொடர்ந்து, மாவட்ட உளவுப்பிரிவு காவலரும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே வாடிக்கையாளர்கள் அடகு வைத்த 70 சவரன் நகைகள் மாயம். வங்கி துணை மேலாளரை கைது செய்து விசாரணை.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அரசுப் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு. மூன்று மாணவர்கள் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிந்து கூர்நோக்கு இல்லத்தில் அடைப்பு.
மின்னொளி அலங்காரத்தில் காட்சியளித்த கும்பமேளாவின் திரிவேணி சங்கமம். மகா தீபாராதனை காட்டி ஏராளமான பெண்கள் வழிபாடு.
பிரயாக்ராஜ் நகரில் பல்வேறு இடங்களில் குளிப்பதற்கு ஏதுவாக ஆறுகள் இல்லை. கும்பமேளா நடைபெற்றுவரும் நிலையில் தேசிய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அதிர்ச்சித் தகவல்.
ஒடிசாவில் உள்ள காளிங்கா தொழில்நுட்ப கல்லூரியில் நேபாளத்தைச் சேர்ந்த மாணவி தற்கொலை. மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு, நேபாள மாணவர்கள் 500க்கும் மேற்பட்டோர் போராட்டம். இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது, பாதுகாவலர்களை வைத்து தாக்குதல்.
கல்லூரி இயக்குநர்கள் 3 பேர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மன்னிப்பு கேட்டு கல்லூரி நிர்வாகம் அறிக்கை. ஒடிசாவில் படிக்க விரும்பும் நேபாள மாணவர்களுக்கு இனி தடையில்லா சான்றிதழ் வழங்கப்படாது.
உயிரிழந்த நேபாள மாணவிக்கு நீதி கிடைக்காவிட்டால் மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்படாது என நேபாள பிரதமர் திட்டவட்டம்.
தன் மீதான குற்றச்சாட்டை நிரூபித்துவிட்டால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய தயார் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சூளுரை.. தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாக பாஜக குற்றஞ்சாட்டிய நிலையில் மம்தா பானர்ஜி சவால்.
இந்தியா - கத்தார் இடையிலான இருதரப்பு வர்த்தகத்தை இரண்டு மடங்கு அதிகரிக்க முடிவு. அடுத்த ஐந்து ஆண்டுகளில், 2 லட்சத்து 43 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்த்த இலக்கு நிர்ணயம்.
மஹாராஷ்டிரா மாநிலம் புனேவில் சத்ரபதி சிவாஜியின் பிறந்தநாள் கொண்டாட்டம். நள்ளிரவு முதலே ஏராளமானோர் திரண்ட நிலையில் வானவேடிக்கையுடன் வானில் வர்ண ஜாலம்.
கேரளாவில் கால்பந்து மைதானத்தில் வெடிக்கப்பட்ட பட்டாசுகள், பார்வையாளர்கள் மீது விழுந்ததால் பரபரப்பு. 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதி.
சவுதி அரேபிய தலைநகர் ரியாத்தில், உக்ரைன் விவகாரம் குறித்து அமெரிக்க - ரஷ்ய பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை. உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவரும் பணியை தொடங்க இருநாடுகளும் முடிவு.
ரஷ்ய நலன்களுக்கு அச்சுறுத்தலாகிவிடும் என்பதால் நேட்டோ உறுப்பினராவதை ஏற்றுக்கொள்ள முடியாது.அமெரிக்கா உடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு ரஷ்ய அமைச்சர் திட்டவட்டம்.
போப் பிரான்சிஸிற்கு நிமோனியா நோயால் 2 நுரையீரல்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை அறிக்கை. சுவாசக் குழாய் தொற்றை சரிசெய்ய தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டுவரும் நிலையில் பொதுமக்கள் பிரார்த்தனை.
பாகிஸ்தானில் தேடுதல் வேட்டையின்போது 30 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை. ராணுவத்தினரின் நடவடிக்கைக்கு பாகிஸ்தான் பிரதமர் பாராட்டு.
இன்று தொடங்குகிறது ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர். முதல் நாள் ஆட்டத்தில் நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோதல்.
சென்னையில் 23ஆவது தேசிய பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் தொடக்கம். 2 நாட்கள் நடைபெறும் தொடரில் ஆயிரத்து 476 வீரர்கள் பங்கேற்கின்றனர்.
சென்னையில் நடைபெறும் தேசிய பாரா தொடரில் இருந்து மாரியப்பன் தங்கவேலு விலகல். காலில் அறுவை சிகிச்சை செய்ய உள்ளதால் முடிவு.