Headlines| கும்பமேளா நீர்நிலைகளில் இருக்கும் பாக்டீரியா முதல் துப்பாக்கியால் உயிரிழந்த குழந்தை வரை!
இந்தியாவின் 26வது தலைமை தேர்தல் ஆணையராக, ஞானேஷ்குமார் நியமனம். 1988ஆம் ஆண்டு கேரள பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான ஞானேஷ்குமார் 2029ஆம் ஆண்டு வரை பதவியில் நீடிப்பார்.
புதிய சட்டத்தின்படி நியமனக்குழு அமைக்கப்பட்ட பின் தேர்வு செய்யப்பட்ட முதல் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஸ்வர் குமார். முதன்முறையாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இல்லாத குழு மூலம் தேர்வு.
தேர்தல் ஆணைய தேர்வுக்குழு குறித்து வழக்கில் உச்ச நீதிமன்ற விசாரணை முடியும் வரை முடிவெடுப்பதை தள்ளி வைக்க வேண்டும் என்று ராகுல் காந்தி வலியுறுத்தியிருந்தநிலையில், அதனை நிராகரித்து புதிய தலைமைத் தேர்தல் ஆணையர் தேர்வு செய்யப்பட்டதாக தகவல்.
கல்வி நிதி விவகாரத்தில் திமுக மற்றும் தோழமைக் கட்சிகள் இணைந்து இன்று கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு. தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்போம் என அறைகூவல்.
அரசுப் பள்ளிகளில் இலவசமாக 3 மொழிகள் கற்கும் வாய்ப்பை ஏன் தடுக்கிறீர்கள்?. மும்மொழிக் கொள்கை சர்ச்சையை சுட்டிக்காட்டி திமுக அரசுக்கு அண்ணாமலை கேள்வி.
ஸ்டாலின் மாடல் ஆட்சியில் காவல்துறை விசாரணை என்பதே விந்தையாக மாறிவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம்.
நெல்லையில் மாணவன் மர்மமான உயிரிழந்த நிலையில் எறும்பு கடித்ததால் ரத்தம் வந்திருக்கலாம் என விளக்கத்தை சுட்டிக்காட்டி எக்ஸ் தளத்தில் பதிவு.
அ.தி.மு.க.வில் விரைவில் பொதுச் செயலாளர் என்ற பதவியே இருக்காது என்றும், தொண்டர் ஒருவர் தான் ஒருங்கிணைப்பாளராக வருவார் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கணிப்பு.
அரசியலில் மூத்த தலைவர், இளைய தலைவர் என்பதெல்லாம் கிடையாது. அதிமுகவில் தாம் சாதாரண தொண்டன் என்றும், இபிஎஸ் பாராட்டு விழாவை புறக்கணிக்கவில்லை எனவும் செங்கோட்டையன் விளக்கம்.
சிவகங்கை அருகே பட்டியலின மாணவன் கை வெட்டப்பட்ட விவகாரத்தில், தேசிய எஸ்சி, எஸ்டி ஆணையத்தின் இயக்குநர் தலைமையிலான குழு நேரில் விசாரணை.
ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்த குற்றச்சாட்டு. உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்கு பதிவு.
மேற்குதொடர்ச்சி மலைத்தொடரில் ஆண்டிபட்டி அருகே நாழிமலை பகுதியில் எரிந்த காட்டுத்தீ 6 மணி நேர போராட்டத்திற்கு பின் அணைப்பு.
2 நாட்கள் தொடர்ந்து எரிந்த தீயால் மரங்கள், அரிய மூலிகைகள் நாசம்.
கோவை வடவள்ளியில் பாதாள சாக்கடை குழாய் அமைக்கும் பணியின் போது மண் சரிவு. 15 அடி பள்ளத்தில் சிக்கி 20 வயது தொழிலாளி உயிரிழப்பு.
காரைக்காலில் மஸ்தான் சாஹிப் வலியுல்லா தர்காவில் 202ஆவது ஆண்டு சந்தனக்கூடு விழா. ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்களுடன் மாற்று மத மக்களும் பங்கேற்று வழிபாடு.
திருச்செந்தூர் முருகன் கோயிலில் திருக்குட நன்னீராட்டு விழாவுக்காக முழுவீச்சில் நடைபெற்று வரும் திருப்பணிகள். முருகனின் திருநீறு வண்ணத்தில் ராஜகோபுரத்துக்கு வண்ணம் பூசும் பணிகள் தீவிரம்.
விலைவாசி கட்டுப்பாட்டை பொருளாதார வளர்ச்சியுடன் ஒருங்கிணைக்க ரிசர்வ் வங்கியுடன் இணைந்து நடவடிக்கை. மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் மத்திய நிதியமைச்சர் நிர்மலாசா சீதாராமன் பேச்சு.
ஏஐ தொழில்நுட்ப வசதியை கொண்டு ரயில் நிலையங்களில் கூட்டத்தை நிர்வகிக்க ரயில்வே திட்டம். நிலையங்களில் அதிகளவு பயணிகளை தங்க வைக்கும் கூடத்தை நிரந்தரமாக அமைக்கவும் முடிவு.
கும்பமேளா நீர்நிலைகளில் கழிவுகள் தொடர்புள்ள ஃபேசல் வகை பாக்டீரியாக்கள் அதிகம் இருப்பதாக தேசிய பசுமைத் தீர்ப்பாய ஆய்வில் தகவல். நாளைக்குள் விரிவான விளக்க அறிக்கை அளிக்க உத்தரப்பிரதேச மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உத்தரவு.
பிரதமரின் அழைப்பின்பேரில், இந்தியாவுக்கு வருகை தந்தார் கத்தார் இளவரசர். விமான நிலையத்திற்கு நேரில் சென்று இளவரசரை வரவேற்ற பிரதமர் மோடி.
டெல்லியில் கத்தார் இளவரசரை சந்தித்து வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை. இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை.
கர்நாடகாவில் கால்பந்து போட்டியின்போது சரிந்த பார்வையாளர்கள் கேலரி. ஒருவர் மீது ஒருவர் விழுந்ததால் சிலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதி.
கேரளாவில் வீட்டிற்கு வந்த சிறுவனை சேர்ந்து துரத்திய தெருநாய்கள். துரிதமாக செயல்பட்டு நாய்க் கடியில் இருந்து தப்பித்த சிறுவன்.
கர்நாடகாவில் துப்பாக்கி குண்டு பாய்ந்து 3 வயது குழந்தை உயிரிழப்பு. பொம்மைத் துப்பாக்கி என நினைத்து விளையாடியதால் ஏற்பட்ட விபரீதம்.
மாதந்தோறும் 250 ரூபாய் முதலீடு செய்யும் S..I..P..மியூச்சுவல் ஃபண்டு திட்டத்தை அறிமுகம் செய்தது S..B..I... தனது கனவுத்திட்டங்களில் ஒன்று என அறிமுக நிகழ்ச்சியில் செபி தலைவர் மாதபி புரி பேச்சு.
உணவு உண்பதை கட்டுப்படுத்தும் மூளை செல் எது என்பது கண்டுபிடிப்பு.. எலியின் மூளையில் செய்யப்பட்ட ஆராய்ச்சியின் முடிவுகளை கொண்டு மனிதர்கள் வாழ்க்கையில் மாற்றம் கொண்டு வர முடியம் என ஆராய்ச்சியாளர்கள் தகவல்.
சவுதி அரேபிய தலைநகரில் நாளை நடைபெறுகிறது அமெரிக்கா - ரஷ்யா இடையிலான பேச்சுவார்த்தை. உக்ரைனில் போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்தும் இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும் விவாதிக்க திட்டம்.
அமெரிக்கா - ஐரோப்பிய நாடுகள் ஒற்றுமையாக இருந்து செயல்பட வேண்டும். ரஷ்யாவுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்த உள்ள நிலையில் ஜெர்மனி பிரதமர் ஸ்கால்ஸ் கருத்து.
கனடாவில், விமான நிலையத்தில் தரையிறங்கியபோது விபத்தில் சிக்கிய பயணியர் விமானம். தரையில் மோதி விபத்துக்குள்ளானதில் 19 பேர் படுகாயங்களுடன் மீட்பு.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பிற்கு எதிராக தலைநகரில் வெடித்த மக்கள் போராட்டம். எலான் மஸ்கிற்கு அதிக அதிகாரம் கொடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கம்.
வரி செலுத்துவோர் விவரங்களை அமெரிக்க நிதியமைச்சகத்திடம் எலான் மஸ்க் கேட்டுள்ளதாக தகவல். தரவுகள் அளிக்கப்பட்டால் மோசமான விளைவுகள் ஏற்படும் என நீதித்துறையினர் அச்சம்.
அமெரிக்காவில் அரசு விமானத்துறை ஊழியர்கள் நூற்றுக்கணக்கில் பணி நீக்கம். கடந்த மாதம் விமானங்கள் நேருக்கு நேர் மோதி பலர் இறந்த நிலையில் அதிரடி
போப் பிரான்சிஸின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் அறிக்கை. சுவாசக் குழாய் தொற்றை சரிசெய்ய தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாக தகவல்.
இந்தாண்டு இறுதியில் புதிய வடிவமைப்பிலான ஐஃபோன்கள் அறிமுகம். ஆப்பிள் நிறுவனம் திட்டம்.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் பாகிஸ்தானில் நாளை தொடங்குகிறது ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி தொடர் . போட்டி நடைபெறும் மைதானங்களில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு.
நாட்டின் வணிகப் பொருட்கள் ஏற்றுமதி ஜனவரியில் 2 புள்ளி 38 சதவீதம் குறைவு. இறக்குமதி 10 புள்ளி 28 சதவீதம் உயர்ந்துள்ளதாக மத்திய அரசு தகவல்.
அமெரிக்க தேசிய கீதத்தை அவமதித்த கனடா ரசிகர்கள். ஐஸ் ஹாக்கி போட்டியின்போது அரங்கேறிய சம்பவம்.