Headlines
Headlinesfacebook

Headlines | முடக்கப்பட்ட விகடன் இணையதளம் முதல் எச்.ஐ.வி. ஊசி செலுத்தி கொடுமைப்படுத்தப்பட்ட பெண் வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, முடக்கப்பட்ட விகடன் இணையதளம் முதல் எச்.ஐ.வி. ஊசி செலுத்தி கொடுமை வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.
Published on
  • டெல்லி ரயில் நிலையத்தில் கும்பமேளா செல்ல குவிந்த பக்தர்களால் கடும் கூட்ட நெரிசல். மூச்சுத் திணறல் ஏற்பட்டு குழந்தைகள் உட்பட 15 பேர் உயிரிழப்பு.

  • டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல். காயமடைந்தவர்கள் விரைந்து குணமடைய பிரார்த்திப்பதாகவும் பதிவு.

  • சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களை 2ஆம் கட்டமாக நாடுகடத்திய அமெரிக்கா. 116 பேருடன் அமிர்தசரஸ் வந்திறங்கிய விமானம்.

  • வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைத்தது எஸ்பிஐ. 8.50 சதவீதத்தில் 0.25 சதவீதம் குறைத்து 8.25ஆக நிர்ணயம்.

  • தேசிய கல்விக் கொள்கையை ஏற்காவிட்டால் தமிழ்நாட்டுக்கு நிதி கிடையாது என மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் காட்டமான பதில்.

  • 40 லட்சம் மாணவர்களின் எதிர்காலத்தில் மத்திய அரசு அரசியல் செய்யக் கூடாது என்றும், கல்வி நிதி விவகாரத்தில் நீதிமன்றத்தை நாடுவது குறித்து முதல்வரிடம் ஆலோசிக்கவுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி.

  • காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சிக்காக சென்ற தமிழர்கள் மீது ரயிலில் தாக்குதல். கதவின் கண்ணாடி ஜன்னல் வழியே அத்துமீறி நுழைந்து வட மாநில இளைஞர்கள் வாக்குவாதம்.

  • சென்னை கொடுங்கையூரில் உள்ள தொழிற்சாலையில் பயோ கேஸ் பாய்லர் வெடித்து விபத்து. சுவர் இடிந்து விழுந்ததில் தொழிலாளர் ஒருவர் உயிரிழப்பு.

  • கூட்டணிக் கட்சிகளின் கருத்துகளை முரண்பாடாக நினைப்பதில்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம். எடப்பாடி பழனிசாமி பாஜகவின் டப்பிங் குரல் என்றும் விமர்சனம்.

  • பாஜகவுக்கு டப்பிங் தேவையில்லை.முதல்வர் ஸ்டாலினுக்கு தான் டப்பிங் தேவைப்படுகிறது என இபிஎஸ் பாஜகவின் டப்பிங் குரல் என முதல்வர் விமர்சித்த நிலையில் அண்ணாமலை பதில்.

  • விகடன் இணையதளம் முடக்கப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில் மத்திய அரசிடம் இருந்து எந்த அறிவிப்பும் இல்லை என அந்நிறுவனம் விளக்கம். கருத்து சுதந்திரத்திற்காக களத்தில் நிற்போம் என்றும் உறுதி.

  • பத்ம விருதுகளை வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு கிண்டி ராஜ்பவனில் பாராட்டு விழா. நினைவுப்பரிசு வழங்கி பாராட்டிய ஆளுநர் ஆர்.என்.ரவி.

  • முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நகைகள் உள்ளிட்டவற்றை தமிழக அரசிடம் ஒப்படைத்தது பெங்களூரு நீதிமன்றம். தங்க நகைகள் அடங்கிய ஆறு டிரங்க் பெட்டிகள், 1,562 ஏக்கர் நில ஆவணங்கள் சென்னையில் உள்ள கருவூல அலுவலகத்தில் வைக்கப்பட்டன.

  • ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் திமுகவின் கொள்கைகளை பரப்ப வேண்டும் என தொண்டர்களுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தல்.

  • சென்னை அரும்பாக்கத்தில் அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் மூதாட்டி படுகாயம். 18 வயது இளைஞரைப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த பொதுமக்கள்.

  • சென்னை கேகே நகரில் மாத சம்பளத்திற்கு ஆட்களை அமர்த்தி ரேசன் அரிசி கடத்தியதாகப் புகார். காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு.

  • பிரதமர் மோடி பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் அல்ல என்ற தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியின் கருத்தால் சர்ச்சை. இந்நிலையில், ராகுலின் சாதி, மதப் பின்னணி குறித்து கேள்வி எழுப்பி விமர்சித்த பாஜக.

  • உத்தர பிரதேசத்தில் வரதட்சணை தராததால் இளம்பெண்ணுக்கு எச்.ஐ.வி. ஊசி செலுத்தி கொடுமைப்படுத்தியதாக புகார். வரதட்சணை தடுப்புச் சட்டத்தின் கீழ் கணவர், மாமியார் மீது வழக்குப்பதிவு.

  • கேரளாவில் காதலர் தினத்தன்று பள்ளி மாணவியை கடத்தி பாலியல் துன்புறுத்தல். ஒருதலையாக காதலித்த இளைஞர் கைது.

  • கர்நாடகாவில் ஆட்டோ மீது கார் உரசியதால் எற்பட்ட தகராறில் கோவா முன்னாள் எம்எல்ஏ அடித்துக் கொலை. ஆட்டோ ஓட்டுநரை கைது செய்த காவல் துறை.

  • அரசமைப்புச் சட்டம் இயற்றப்பட்டு 75 ஆண்டுகள் கடந்தும், மரண தண்டனை அவசியமா என்பதை சுய ஆய்வு செய்ய வேண்டும் என்று நாடாளுமன்றம் மற்றும் நீதித் துறைக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி அபய் அறிவுறுத்தல்.

  • இஸ்ரேல் தலைநகரில் இரவிலும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள். ஹமாஸ் பிடியில் உள்ள பிணைக் கைதிகள் அனைவரையும் மீட்க வலியுறுத்தல்.

  • செர்பியாவில் ஊழலுக்கு எதிராக 3 மாதங்களாக தொடரும் மாணவர்கள் போராட்டம். அதிபர் பதவி விலக வலியுறுத்தி முழக்கம்.

  • சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக துபாய் சென்ற இந்திய கிரிக்கெட் அணி. ரோகித், கோலி, ஜடேஜா உள்ளிட்டோருக்கு உற்சாக வரவேற்பு.

  • மகளிர் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் மும்பையை வீழ்த்தியது டெல்லி. ரன்அவுட் சர்ச்சையுடன் கடைசி பந்தில் த்ரில் வெற்றி.

  • டிஎன்பிஎல் மெகா ஏலத்தில் விஜய் சங்கரை 18 லட்சம் கொடுத்து வாங்கிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி. ஆல்-ரவுண்டர் முகம்மதை 18 லட்சத்து 40 ஆயிரத்திற்கு ஏலத்தில் எடுத்தது சேலம் ஸ்பார்டன்ஸ்.

  • இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் பஞ்சாப்பை வீழ்த்தியது சென்னை அணி. மற்றொரு போட்டியில் கேரளாவை வென்று பட்டத்தை நெருங்குகிறது மோகன் பகான்.

  • சென்னையில் களைகட்டிய இசையமைப்பாளர் தேவாவின் இசைக் கச்சேரி. பழைய நினைவுகளை அசைபோட்டதாக ரசிகர்கள் நெகிழ்ச்சி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com