Headlines
Headlinesfacebook

Headlines|AI குறித்து பிரான்ஸில் பேசிய பிரதமர் முதல் சாம்பியன்ஸ் டிராபியில் பங்கேற்காத பும்ரா வரை!

AI குறித்து பிரான்ஸில் பேசிய பிரதமர் முதல் சாம்பின்ஸ் டிராபியில் பங்கேற்காத பும்ரா வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.
Published on
  • AI தொழில்நுட்பத்தின் பலனை உலகெங்கும் எடுத்துச் செல்லவேண்டும் என பாரிஸில் நடைபெறும் உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி உரை. இந்தியாவில் முதலீடு செய்வதற்கான நேரம் வந்துவிட்டது என்றும் பேச்சு.

  • அதிமுக உட்கட்சி விவகாரம் குறித்து விசாரிக்க தேர்தல் ஆணையத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி வழக்கு. விசாரணை நிறைவடைந்த நிலையில் இன்று தீர்ப்பளிக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்.

  • தமிழக அமைச்சரவை கூட்டத்தில் 7 ஆயிரத்து 375 கோடி ரூபாய் மதிப்பிலான தொழில் முதலீடுகளுக்கு அனுமதி. வேலூர், திருச்சி, பெரம்பலூர், தூத்துக்குடி மாவட்டங்களில் அமையவுள்ள தொழிற்சாலைகளின் முதலீடுகளுக்கும் ஒப்புதல்.

  • சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக மரப்பாலம் அமைப்பு. இந்நிலையில், இதனை திறந்து வைத்தார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.

  • தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் ஆனந்த் உடன், தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் 3 மணிநேரம் ஆலோசனை. தவெகவுக்கு15 முதல் 20 சதவிகித வாக்குகள் இருப்பதாக அறிக்கை கொடுத்ததாக தகவல்.

  • ஏசி அறையில் வியூகம் போட்டு வெற்றி பெறுவோம் என்று நினைத்தால், வரும் காலங்களில் மக்களே பதில் கூறுவார்கள் என விஜய் - பிரசாந்த் கிஷோர் சந்திப்பு குறித்து அண்ணாமலை விமர்சனம்.

  • அரசியலில் தன்னை நிரூபித்த பின்னரே, விஜயுடன் கூட்டணி அமைப்பது குறித்து முடிவு செய்வோம் என்று தேமுதிக நிர்வாகி விஜய பிரபாகரன் கருத்து.

  • கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் வீட்டிற்கு காவல் துறை பாதுகாப்பு. எடப்பாடி பழனிசாமியின் பாராட்டு விழாவை புறக்கணித்தது பேசுபொருளான நிலையில் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்பு.

  • எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்கள் இல்லை என எடப்பாடி பழனிசாமியை செங்கோட்டையன் குறை கூறவில்லை என்றும் அதிமுகவில் எந்த பிரச்சனையும் இல்லை என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விளக்கம்.

  • பஞ்சமி நிலத்தை வாங்கிய புகாரில், ஓ. பன்னீர்செல்வத்தின் பட்டாவை ரத்து செய்ய மாநில பட்டியலின, பழங்குடியினர் ஆணையம் உத்தரவு. பட்டா மாற்றிக்கொடுத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் மாநில அரசுக்கு ஆணை.

  • தைப்பூசத் திருவிழாவையொட்டி, விழாக்கோலம் பூண்ட அறுபடை வீடுகள். ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமிதரிசனம்.

  • 2025-26ஆம் நிதியாண்டில் அரசு வாங்கும்மொத்த கடன்தொகையும் மூலதனச் செலவுக்கு ஒதுக்கப்பட இருக்கிறது என மக்களவையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு.

  • வரும் சனிக்கிழமைக்குள் அனைத்து பிணைக்கைதிகளையும் ஒப்படைக்காவிட்டால் மீண்டும் போர் தொடுக்கப்படும் என ஹமாஸ் அமைப்புக்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எச்சரிக்கை.

  • போர்நிறுத்தத்தை இஸ்ரேல் மீறியதே பிணைக் கைதிகளை விடுவிக்கும் முடிவு தள்ளிப் போனதற்கு காரணம். சிக்கல்கள், தாமதங்களுக்கு இஸ்ரேல் அரசு முழு பொறுப்பேற்க வேண்டும் என ஹமாஸ் அமைப்பு வலியுறுத்தல்.

  • பொலிவியா நாட்டை புரட்டிப் போட்ட கனமழைக்கு 24 பேர் உயிரிழப்பு. வீடுகள், குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்ததால் பலர் வெளியேற்றம்.

  • அகமதாபாத்தில் இன்று இங்கிலாந்துடனான கடைசி ஒரு நாள் போட்டி. தொடரை முழுமையாகக் கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி.

  • காயத்திலிருந்து குணமடையாததால் சாம்பின்ஸ் டிராபியில் பும்ரா பங்கேற்க மாட்டார் என பிசிசிஐ அறிவிப்பு. இளம்வீரர் ஹர்ஷித் ராணா, தமிழகத்தைச் சேர்ந்த வருண் சக்கரவர்த்தி ஆகியோர் அணியில் சேர்ப்பு.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com