சாதிய கொடுமையால் ஃபேஸ்புக்கில் தற்கொலைக்கு முயன்ற மாணவி

சாதிய கொடுமையால் ஃபேஸ்புக்கில் தற்கொலைக்கு முயன்ற மாணவி
சாதிய கொடுமையால் ஃபேஸ்புக்கில் தற்கொலைக்கு முயன்ற மாணவி

என் குடும்பத்திற்கு நீதி வேண்டுமெனக்கூறி கர்நாடகாவில் 17 வயது பெண் பேஸ்புக் நேரலையில் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவின் விஜயபுரா மாவட்டத்தைச்சேர்ந்த  17 வயது மாணவி லதா. 5 வருடங்களுக்கு முன்பு சாதிப்பாகுபாடு காரணமாக லதாவின் குடும்பத்தை அக்கிராமத்தைச் சேர்ந்த சிலர் ஊரை விட்டு தள்ளி வைத்துள்ளனர். மேலும் கிராம மக்கள் யாரும் அவர்களுடன் பேச்சுவார்த்தை வைத்துக் கொள்ளக்கூடாது என்றும் தெரிவித்து அந்நியப்படுத்தியுள்ளனர். 

இது குறித்து பேஸ்புக் நேரலையில் பேசிய லதா “நான் லதா. நான் விஜயபுராவின் கஞ்சனாலாவின் வசித்து வருகிறேன். 5 வருடங்களுக்கு முன்பு  சாதிப்பாகுபாடு காட்டி எங்களை ஊரைவிட்டு கிராமத்தினர் தள்ளிவைத்தனர். இது குறித்து நாங்கள் காவல்துறையிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பபலேஸ்வர் தொகுதி எம்.எல்.ஏவான பாட்டிலின் பெயரைக்கூறி ஊரில் உள்ள சிலர் எங்களை மிரட்டினர். இது குறித்து நான் பாட்டிலிடம் நேரில் பேசியும் கூட எந்த முன்னேற்றமும் இல்லை. 

இந்தப் பிரச்னை குறித்து அப்போதைய முதலமைச்சர் சித்தராமையா மற்றும் பிரதமர் மோடிக்கும் கூட கடிதங்கள் எழுதினேன். எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” எனத் தெரிவித்தார். பின்னர் இனி நான் வாழ்வதற்கான எந்தக் காரணமும் இங்கு இல்லை எனக்கூறி தூக்கமாத்திரைகளை விழுங்கி தற்கொலைக்கு முயன்றார்.

இது குறித்து பேசிய லதாவின் தந்தை, ''தற்கொலைக்கு முயன்ற என் மகள் தற்போது தேறி வருவதாகவும்,24 மணிநேர மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். தொழிலதிபர் பாட்டிலின் பெயரைச்சொல்லிதான் எனது இடம் பிடுங்கப்பட்டது. நாங்கள் அவரிடத்தில் புகார் தெரிவித்தும் பயனில்லை. காவல்துறையிடம் புகார் அளித்தும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.'' என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

புகார் குறித்து பேசிய விஜயபுரா  மாவட்ட காவல் அதிகாரி, ''லதா தற்போது பேசும் நிலையில் இல்லை. அவர் உடல் தேறியபிறகு விசாரணை முடுக்கிவிடப்படும். லதாவின் தந்தை அளித்த புகாரின்படி விசாரணை நடைபெற்று வருவதாகவும் விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com