தீவிரவாதியின் உடலை வாங்க தந்தை மறுப்பு

தீவிரவாதியின் உடலை வாங்க தந்தை மறுப்பு
தீவிரவாதியின் உடலை வாங்க தந்தை மறுப்பு

லக்னோவில் பயங்கரவாத தடுப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பலியான தீவிரவாதியின் உடலை வாங்க, அவரது தந்தை மறுத்தார்.

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நேற்று நடந்த என்கவுண்டரில் மத்திய பிரதேச மாநில ரயில் வெடிகுண்டு தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதி முகமது சைபுல்லா கொல்லப்பட்டான். சரண் அடைய சொன்ன கோரிக்கையை ஏற்காததால், பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். அவனது உடலை வாங்க தந்தை சர்தாஜ் மறுத்தார். அவர் கூறும்போது, ’தேசத்திற்கு எதிராக செயல்பட்ட அவனது உடலை வாங்க விரும்பவில்லை. வேலைக்கு செல்லாமல் ஊர்சுற்றியதால் இரண்டு மாதங்களுக்கு முன் அவனை அடித்து விரட்டினேன். வீட்டை விட்டு வெளியேறினான். கடந்த திங்கள்கிழமை என்னிடம் பேசிய அவன், சவுதி அரேபியா செல்வதாகக் கூறினான்’ என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com