மனைவியை பழி வாங்க பெற்ற மகனை திருமணத்திற்கு முதல் நாள் கொலை செய்த தந்தை

டெல்லியில் திருமணத்திற்கு முதல் நாள், மணமகனை பெற்ற தந்தையே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
தந்தையால் கொலை செய்யப்பட்டவர்
தந்தையால் கொலை செய்யப்பட்டவர்PT

டெல்லியில் திருமணத்திற்கு முதல் நாள், மணமகனை பெற்ற தந்தையே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

டெல்லியைச் சேர்ந்தவர் ரங்லால்சிங். இவருக்கு மனைவியும் கௌரவ் என்ற 29 மகனும் இருந்துள்ளார். கௌரவ் உடற்பயிற்சி நிலையம் வைத்து நடத்தி வருகிறார்.

குடும்பத் தகறாறு காரணமாக ரங்லால்சிங்கிற்கும் இவரது மனைவிக்கும் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், கௌரவ் தனது தாயுடன் சேர்ந்துக்கொண்டு ரங்லால்சிங்குடன் சண்டையிட்டும் தகராறில் ஈடுபட்டும் வந்துள்ளார். சிலசமயம் தனது தாயுடன் சேர்ந்துக்கொண்டு ரங்லால்சிங்கை அவமரியாதை செய்தும், கைநீட்டி அடிக்கவும் செய்துள்ளார்.

தந்தையால் கொலை செய்யப்பட்டவர்
”மனைவி வீட்டு வேலைகளைச் செய்ய வேண்டும் என கணவர் எதிர்பார்ப்பது கொடுமை இல்லை” - டெல்லி உயர்நீதிமன்றம்

மகனின் இச்செயலால் கோபமான ரங்லால்சிங், இதற்கெல்லாம் காரணம் தன் மனைவிதான் என்று நினைத்திருக்கிறார். சொந்தபந்தங்களிடமும் அடிக்கடி, தான் மனைவிக்கு ஒரு பாடம் கற்பிக்காமல் விடப்போவதில்லை என்றும் கூறியதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில் கௌரவ்விற்கு திருமணம் முடிவுசெய்து திருமணச் சடங்கும் நடைபெற்று வந்துள்ளது. திருமணத்திற்கு முதல்நாள், ரங்லால்சிங், தனது மகன் கௌரவ்விடம் தனியாக பேசவேண்டும் என்று கூறி, அருகில் இருந்த வேறொரு வீட்டிற்கு வரவழைத்திருக்கிறார்.

கௌரவ்வும் கூப்பிடுவது தந்தைதானே.... என்ற எண்ணத்தில், தனது திருமணத்திற்கு முதல் நாள் இரவு அப்பாவை சந்திக்கச் சென்றுள்ளார். அங்கு ரங்லால்சிங்கால் ஏற்பாடு செய்யப்பட்ட அடியாட்கள் கௌரவ்வை இரும்புக் கம்பியால் தாக்கியும், கத்தரிக்கோல் கத்தியால் 15 இடங்களில் குத்தியும் கொலைசெய்துள்ளனர்.

கௌரவ்வை காணாததால் அவரது தாய் சந்தேகத்தின் பெயரில் இவர்களின் பழைய வீட்டிற்கு வரவும், அங்கு இரத்த வெள்ளத்தில் கௌரவ் இறந்து கிடந்தது தெரியவந்துள்ளது. உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்ததும், 15 லட்சம் பணம் மற்றும் நகைகளுடன் தப்பித்துபோக நினைத்த ரங்லால்சிங்கை கைது செய்தனர்.

மேலும் தன்மகனை கொலை செய்தது பற்றி தனக்கு எந்த வருத்தமும் இல்லை, என் மனைவிக்கு பாடம் கற்பிக்க வேண்டும். கௌரவ் திருமணம் செய்துகொள்ளும் பெண் கௌரவ்விடமிருந்து தப்பிக்கவேண்டும் என நினைத்து கொலை செய்தேன் என்று ரங்லால் சிங் தெரிவித்ததாக போலீசார் கூறியுள்ளனர். இருப்பினும் பல்வேறு கோணத்தில் இவ்வழக்கை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com