மகளின் காதலை கண்டித்ததால் காதலனால் கொல்லப்பட்ட வளர்ப்பு தந்தை - டெல்லியில் பயங்கரம்
தலைநகர் டெல்லியில் தனது மகளின் காதலை கண்டித்ததால் 50 வயது மிக்க வளர்ப்பு தந்தை வீட்டில் இருந்த போது கொல்லப்பட்டுள்ளார். இந்த கொலை குறித்து போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளதாகவும், குற்றவாளியை விரைந்து பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொல்லப்பட்டவர் டெல்லியின் சோனியா விஹார் பகுதியை சேர்ந்த பீரேந்தர் சிங் என்கிற பப்பு என்பது தெரியவந்துள்ளது. அண்மையில் அவரது மகளின் காதல் விவகாரம் அவருக்கு தெரியவந்ததால் மகளை உத்திர பிரதேசத்தில் உள்ள சொந்த கிராமத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். அதோடு மகளின் காதலனும், அண்டை வீட்டை சேர்ந்த இளைஞருமான சூரஜை நேரில் சந்தித்து தனது மகளை தொந்தரவு செய்ய வேண்டாமென அவர் சொல்லியுள்ளார்
இந்நிலையில் சனிக்கிழமை அன்று பப்புவின் மனைவி சென்ற போது தனியாக இருந்தவரை சூரஜ் கொலை செய்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. கோவிலில் இருந்து அவர் திரும்பும் போது அவரது வீட்டில் இருந்து சூரஜ் வெளியேறுவதை பார்த்துள்ளார். வீட்டினுள் சென்று பார்த்த போது கணவர் ரத்த வெள்ளத்தில் உயிரற்று கிடப்பதை பார்த்து அதிர்ந்து போயுள்ளார். அக்கம்பக்கத்தினரும் இதை போலீசில் உறுதி செய்துள்ளனர். கொலையாளி சூரஜை போலீசார் தேடி வருகின்றனர்.