தெலங்கானா
தெலங்கானாமுகநூல்

தெலங்கானா | மகளின் திருமணத்தில் மயங்கி விழுந்த தந்தை; காத்திருந்த அதிர்ச்சி! மொத்த குடும்பமும் சோகம்

மகளின் திருமணத்தில் திடீர் மரணம் - தந்தை உயிரிழந்த சோக சம்பவம்.
Published on

தெலங்கானாவில் திருமணத்தில் தாட்டி கட்டும் நேரத்தில் மணப்பெண்ணின் தந்தை திடீரென மயங்கி விழுந்து மேடையிலேயே உயிரிழந்த சோகம நடந்திருக்கிறது.

தெலங்கானா மாநிலம், கம்மாரெட்டி மாவட்டத்தின் பிக்கனூர் உள்ள ராமேஸ்வரபள்ளி கிராமத்தில் வசித்து வருகிறார் பாலசந்திரம் வயது 56. இவரது மூத்த மகளுக்குதான் திருமண ஏற்பாடுகளெல்லாம் தடபுடலாக நடந்து வந்தது. திருமணத்தின் ஒரு சடங்காக கன்னியதானாம் நடைப்பெற்றது.

அப்போது , மகளின் கால்களை பாலசந்திரம் கன்னியாதானம்ன் செய்தபோதுதான் இந்த துக்க சம்பவம் அரங்கேறியுள்ளது. மகளின் கால்களை கழுவிய பாலசந்திரம் அப்படியே சரிந்து விழ, உடனடியாக அவரை காமரெட்டியில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர் அவரது உறவினர்கள்.

தெலங்கானா
மகா கும்பமேளா | தூய்மை சர்ச்சை.. உ.பி. அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு!

ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மாரடைப்பால் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனை அறிந்த குடும்ப உறுப்பினர்கள் கதறி அழுதுள்ளனர். திருமணம் முடிந்தபோதுதான், இந்த சம்பவம் நடந்திருக்கிறது. சில நிமிடங்களுக்கு முன்பு கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த மொத்த குடும்பமும் இந்த சம்பவத்தால் இறுதியில் அதிர்ச்சி அடைந்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com