இந்தியா
விபத்தில் காயமடைந்தவரை தோளில் சுமந்த எம்.எல்.ஏ.
விபத்தில் காயமடைந்தவரை தோளில் சுமந்த எம்.எல்.ஏ.
உத்தரபிரதேச மாநிலத்தில் விபத்தில் காயமடைந்தவரை பா.ஜ.க. எம்.எல்.ஏ. தனது தோளில் சுமந்து மருத்துமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.
பரூக்காபாத்-படேகர்ஹ் சாலையில் இருசக்கர வாகனம் ஒன்று நேற்று விபத்துக்குள்ளானது. பிம்சென் மார்க்கெட் என்ற பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காயமடைந்த சிலர் ரத்த காயங்களுடன் மயக்கமடைந்த நிலையில் கீழே விழுந்து கிடந்தனர்.
அப்போது அந்த சாலை வாழியாக பா.ஜ.க. எம்.எல்.ஏ. மெஜோர் சுனில் தத் திவிவேதி காரில் வந்துள்ளார். விபத்தில் காயமடைந்து கிடந்தவர்களை கண்ட அவர் தனது காரை உடனே நிறுத்தி அவர்களுக்கு உதவினார். காயமடைந்த மூன்று பேரையும் இரண்டு கார்களில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். மருத்துவமனைக்கு உள்ளே செல்லும் போது காயமடைந்த ஒருவரை திவிவேதி தனது தோளின் பின்புறம் சுமந்து சென்றார்.