”நாங்கள் யாருடைய கைப்பாவையும் இல்லை” : பாகிஸ்தானை கண்டித்த ஃபரூக் அப்துல்லா

”நாங்கள் யாருடைய கைப்பாவையும் இல்லை” : பாகிஸ்தானை கண்டித்த ஃபரூக் அப்துல்லா
”நாங்கள் யாருடைய கைப்பாவையும் இல்லை” : பாகிஸ்தானை கண்டித்த ஃபரூக் அப்துல்லா

குப்கர் பிரகடனம் தொடர்பாக பாகிஸ்தான் கருத்துதெரிவித்திருந்த நிலையில் அதற்கு காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் உள்ள பிரதான கட்சிகளான என்.சி, பி.டி.பி, காங்கிரஸ் மற்றும் 3 கட்சிகல் சேர்ந்து மீண்டும் தங்கள் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்தை கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி குப்கர் பிரகடனத்தை வெளியிட்டனர். இந்த பிரகடனம் ஒரு வழக்கமான நிகழ்வு அல்ல, காஷ்மீருக்கு முக்கியமான வளர்ச்சி என்று பாகிஸ்தான் கருத்து தெரிவித்திருந்தது.

பாகிஸ்தானின் இந்த கருத்துக்கு தேசிய மாநாட்டு (என்.சி) கட்சியின் தலைவர் ஃபரூக் அப்துல்லா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், “பாகிஸ்தான் வழக்கமாக ஜம்மு-காஷ்மீரின் முக்கிய அரசியல் கட்சிகளை தான் துஷ்பிரயோகம் செய்யும், ஆனால் இந்த முறை எங்களை விரும்பியிருக்கிறார்கள். நாங்கள் யாருடைய கைப்பாவையும் இல்லை. டெல்லியோ அல்லது பாகிஸ்தானோ எதுவும் எங்களை கட்டுப்படுத்த முடியாது. நாங்கள் முழுமுழுக்க காஷ்மீர் மக்களுக்காக மட்டுமே உழைப்போம்” என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன் காஷ்மீர் எல்லைக்கு ஆயுதம் ஏந்திய படையினரை அனுப்புவதை பாகிஸ்தான் நிறுத்திக்கொள்ள வேண்டும் எனவும், தங்கள் மாநிலம் ரத்தத்தில் மிதப்பதை இதோடு முடிவுக்கு கொண்டு வர நினைப்பதாகவும் கூறியுள்ளார். அத்துடன் அமைதியான வழியிலேயே போராட விரும்புவதாகவும் அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com