தகாத உறவால் கொடூரம் - ரிசாட் உரிமையாளருடன் சேர்ந்து கணவரை கொன்ற மனைவி 

தகாத உறவால் கொடூரம் - ரிசாட் உரிமையாளருடன் சேர்ந்து கணவரை கொன்ற மனைவி 
தகாத உறவால் கொடூரம் - ரிசாட் உரிமையாளருடன் சேர்ந்து கணவரை கொன்ற மனைவி 

இடுக்கியை சேர்ந்த இளம்பெண் காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்து சாக்கு மூட்டையில் கட்டி புதைத்ததோடு தலைமறைவான நிகழ்வு நெஞ்சை உலுக்குவதாக அமைந்துள்ளது.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சாந்தம்பாறை காவல் நிலையத்திற்கு உட்பட்ட ராஜாக்காடு அருகே கழுத்துக்குளமேடு பகுதியைச் சேர்ந்தவர் ரிஜோஷ்(37). அதே பகுதியில் உள்ள ரிசார்ட் ஒன்றில் இவர் பணிப்புரிந்து வந்தார். ரிசார்ட்டின் அருகிலேயே குடும்பத்துடன் வசித்து வந்தார். இவரை கடந்த 31ம் தேதி முதல் இரண்டு நாட்களாக காணவில்லை என உறவினர்கள் சாந்தம்பாறை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீஸார் இது குறித்து விசாரணையை துவக்கிய நிலையில், ரிஜோஷின் மனைவி லிஜி (29)யிடமும் விசாரணை தொடர்ந்தது. 

(கொலை செய்யப்பட்டுள்ள கணவன் ரிஜோஷ்)

அதில் லிஜி, தனது கணவர் மொபைல் போனில் தன்னை திருச்சூரில் இருந்தும், கோழிக்கோட்டில் இருந்தும் தொடர்பு கொண்டதாகவும் அச்சப்பட தேவையில்லை எனவும் கூறியதோடு, தனது மொபைலில் ரிஜோஷின் இன்கம்மிங்க் கல் ஹிஸ்ட்ரியை காட்டி போலீசாரிடம் காட்டியுள்ளார். ஆனால், அதை ஏற்காத ரிஜோஷின் உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் காவல் நிலையம் சென்று மீண்டும் புகார் தெரிவித்தனர். இதனால் ரிஜோஷின் மனைவி லிஜி மீது போலீஸாருக்கு சந்தேகம் எழுந்தது. 

இந்நிலையில் கடந்த நான்காம் தேதி ரிஜோஷ் பணியாற்றி வந்த ரிசார்ட்டின் உரிமையாளரான திருச்சூரை சேர்ந்த வாசிம் அப்துல் காதர் (27) என்பவரும், ரிஜோஷின் மனைவியான லிஜியும், அவரது இரண்டு வயது குழந்தையும் காணாமல் போயுள்ளனர். இதனால் லிஜிக்கும், ரிசார்ட் உரிமையாளருக்கும் தகாத உறவு இருந்திருக்கலாம் என உறுதி செய்த போலீஸார், தனிப்படை அமைத்து விசாரணையை துரிதப்படுத்தினர்.

(காதலன் வாசிம் மற்றும் மனைவி லிஜி)

மூணார் தனிப்படை போலீஸார் முதற்கட்டமாக  ரிசார்ட் மற்றும் அதன் சுற்றுப்புறங்கள் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டது. அதில் ரிசார்ட்டின் பின்புறம் மழை நீர் சேகரிப்பு தொட்டிக்கு அருகே உள்ள பகுதியில் புதிதாக மண் போட்டு நிரப்பப்பட்டு இருந்தது தெரியவந்தது. மண் போட்டு மூடிய ஜேசிபி ஓட்டுனரையே மீண்டும் அழைத்து அவர் மூடிய இடத்தையே தோண்ட வைத்தனர். அப்போது சாக்கு மூட்டை ஒன்று தெரிந்தது.

சாக்கு மூட்டைக்குள் சடலமாய் கிடந்தது காணாமல் போனதாக கூறப்பட்ட ரிஜோஷ் தான் என்பது உறுதி செய்யப்பட்டது. தோண்டி எடுக்கப்பட்ட ரிஜோஷின் உடல் உடற்கூறு பரிசோதனைக்காக இடுக்கி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. உடற்கூறு பரிசோதனைக்குப்பின் ரிஜோஷ் எவ்வாறு கொலை செய்யப்பட்டார் என தெரியவரும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், போலீஸாரால் தேடப்பட்டு வரும் வாசிம் அப்துல்காதர், தனது சகோதரனுக்கு வாட்ஸ் ஆப்பில் ஒரு வீடியோ அனுப்பியுள்ளார். அதில் “சாந்தம்பாறை போலீஸ் ஸ்டேஷனில் பதிவு செய்யப்பட்ட ரிஜோஷ் கொலை வழக்கில் குற்றவாளி நான் தான். அதில் எனது சகோதருக்கும் சகோதரர்களின் நண்பர்களுக்கும் எந்த தொடர்புமில்லை. அவர்களை விட்டுவிடவும்” எனவும் கூறியுள்ளார். 

கடைசியாக இருவரின் மொபைல் ஃபோன்களும் ஒன்றாக ஒரே நேரத்தில் தமிழக கேரள எல்லையை இணைக்கும் குமுளியில் இருந்தது தெரியவந்துள்ளது. இதனால் இருவரும் தமிழகத்திற்குள் தப்பி சென்றிருக்கலாமா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக போலீசாருக்கும் இருவரின் புகைப்படங்கள் வழங்கப்பட்டு தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. விபரம் அறிந்தோர் தெரிவிக்க இருவரின் புகைப்படங்களோடு போலீஸார் சமூக வலைத்தளங்களில் அறிவிப்பும் செய்துள்ளனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com